ஒத்திகை | தினகரன் வாரமஞ்சரி

ஒத்திகை

எவருக்குமே
எட்டாத வெகுதொலைவில்
மேகப் போர்வைக்குள்
மிக அபூர்வமாய்
மறைந்து... மறைந்து
வதனம் காட்டும்
பேரழகுப் பெண்ணின்
பொன் சரிகை பளபளக்க
வான வீதியில்
உலா வரும் தேவதையின்
கோடிப் புன்னகை தவளும்
பௌர்ணமி நிலவின் 
பிரகாசிப்பில்
தாரகைத் தோழியர்
புடை சூழ
முடிசூட்டு விழாவின்
ஒத்திகை இதுவோ...?
 
ஜெனீரா ஹைருல் அமான்
கிண்ணியா

Comments