கோட்டாபயவின் வாக்குரிமை, பிரஜாவுரிமை தொடர்பில் புலனாய்வுத்துறை தீவிர விசாரணை | தினகரன் வாரமஞ்சரி

கோட்டாபயவின் வாக்குரிமை, பிரஜாவுரிமை தொடர்பில் புலனாய்வுத்துறை தீவிர விசாரணை

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குரிமை மற்றும் பிரஜாவுரிமை தொடர்பில் புலனாய்வுத்துறையினர் தீவிர புலன்விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிய முடிகிறது. கோட்டாபய ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு அமெரிக்க பிரஜையாக இருந்த சந்தர்ப்பத்தில் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் மெதமுலனையில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தமை மற்றும் அவர் புதிய கடவுச்சீட்டொன்றை பெற்றுக்கொண்டுள்ள முறைமை தொடர்பில் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் பிரகாரம் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.  

புலனாய்வுப் பிரிவினரும் இரகசிய பொலிஸாரும் அம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல்கள் காரியாலயம் மற்றும் குடிவரவு – குடியகழ்வு திணைக்களத்தில் விசாரணைகளை நடத்திவருகின்றனர். இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக் கொண்டுள்ளார் என்பது தொடர்பில் குற்றத்தடுப்புப் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிய முடிகிறது.  

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Comments