சுதந்திரக் கட்சி - பொதுஜன பெரமுன அடுத்தவாரம் மீண்டும் பேச்சுவார்த்தை | தினகரன் வாரமஞ்சரி

சுதந்திரக் கட்சி - பொதுஜன பெரமுன அடுத்தவாரம் மீண்டும் பேச்சுவார்த்தை

பரந்துபட்ட கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும்  இடையில் இதுவரை நடைபெற்றுள்ள 8 சுற்றுப் பேச்சுக்களிலும் இணக்கப்பாடு  எட்டப்படாத சூழலில் அடுத்தவாரம் முதல் தொடர்ந்தும் இருதரப்புக்குமி டையில்  பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. சு.கவுக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில்  இதுவரை 8 சுற்றுப் பேச்சுகள் நடைபெற்றுள்ளன. என்றாலும் பேச்சுவார்த்தைகள்  அனைத்தும் இணக்கப்பாடுகள் எட்டப்படாத நிலையிலேயே முடிந்துள்ளன.  பேச்சுவார்த்தைகளில் ஒரு நாடு, ஒரு சட்டம் என்ற சு.கவின் வேலைத் திட்டம்  மற்றும் பதவிகள்,

தேர்தல் சின்னம் உள்ளிட்டவை தொடர்பில் கவனம்  செலுத்தப்படுகின்றன.

ஆனால், மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதில் பொதுஜன  பெரமுன தரப்பு உறுதியாகவுள்ளது.

அத்துடன், ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய  ராஜபக்ஷ நிறுத்தப்பட்டுள்ளதுடன், பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்ஷதான்  கட்டாயம் நிறுத்தப்படுவார் என்பதிலும் அவர்கள் உறுதியாகவுள்ளனர்.

கூட்டணி  அமையப்பெற்றால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதி பிரதமர் பதவியை  உருவாக்கித் தருவதாக பொதுஜன பெரமுன தரப்பு வாக்குறுதியளித்துள்ளது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Comments