நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி வவுனியா கிளை புதிய முகவரிக்கு இடமாற்றம் | தினகரன் வாரமஞ்சரி

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி வவுனியா கிளை புதிய முகவரிக்கு இடமாற்றம்

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் வவுனியா கிளை செப்டெம்பர் 2ஆம் திகதி இல. 45A, 2ஆம் குறுக்குத் தெரு, வவுனியா எனும் முகவரிக்கு இடமாற்றப்பட்டுள்ளது. முன்னர் இந்த கிளை கண்டி வீதியில் அமைந்திருந்தது. புதிய கிளையின் அங்குரார்ப்பண நிகழ்வில் வாடிக்கையாளர்கள், விருந்தினர்கள் மற்றும் வங்கியின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

Business Today சஞ்சிகையின் மூலமாக இலங்கையில் காணப்படும் மிகச்சிறந்த 30வியாபாரங்களில் ஒன்றாக நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் செளகர்யம் எனும் அதன் நிலைப்பாடு என்பதற்கு தன்வசம் கொண்டுள்ள பெருமளவான நிதிசார் பொருட்கள் மற்றும் சேவைகள் காரணமாக அமைந்துள்ளன. இலங்கையின் முதலாவது முழுமையான டிஜிட்டல் வங்கியான FriMi இன் பின்னால் செயற்படும் வங்கியாக நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி அமைந்துள்ளது. நாடு முழுவதும் வங்கி 95கிளைகளை கொண்டுள்ளது. அத்துடன் தனது ATM வலையமைப்பை 127பகுதிகளில் கொண்டுள்ளதுடன், 48பகுதிகளில் பண வைப்பு மற்றும் மீளப் பெறல் இயந்திரங்களையும் கொண்டுள்ளது. டுயமெய ீயல வலையமைப்பில் 3500க்கும் அதிகமான ATMகளுடனும் இணைந்துள்ளது. இலங்கையில் American Express அட்டைகளை விநியோகிக்கும் ஏக உரிமையை கொண்ட வங்கியாக திகழ்கிறது.

 

Comments