V-Tech இலங்கையில் அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

V-Tech இலங்கையில் அறிமுகம்

கைத்தொழிற்றுறை ரீதியாக அதிக பலம் வாய்ந்த பசைகள், மெழுகுகள், நீர்க்காப்பான்கள், போன்றனவற்றை விநியோகிக்கும் V-tech Engineering (Pvt) Ltd, அதன் முக்கிய விற்பனை நிலையத்தை, 2019ஆகஸ்ட் 21ஆம் திகதியன்று, இலங்கைக்கான மலேசியத் தூதுவர் அதிமேதகு டாங் யங் தலைமையில் இல 24மெசஞ்சர் வீதி, கொழும்பு 12எனும் முகவரியில் திறந்து வைத்தது.  

இந்த நிகழ்வில் கெளரவ முஜிபுர் ரஹ்மான் (எம்.பி.) மற்றும் வி-டெக் மலேசியாவின் பொது முகாமையாளர், திரு. சியோங் சீ லியோங் மற்றும் அவரது நிர்வாக குழுவினர் பங்கேற்றனர். 

ஆகஸ்ட் 2002இல் நிறுவப்பட்ட வி-டெக் மலேசியா, ஆசியான் பிராந்தியத்தில் முன்னணி பிணைப்பு மற்றும் சீல் தீர்வு வழங்குநர்களில் ஒன்றாகும். பல்வேறு சந்தைப் பிரிவுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பரந்த அளவிலான உயர்தர பிசின், சீலண்ட் மற்றும் நீர்ப்புகா தயாரிப்புகளை இது உற்பத்தி செய்கின்றது. வி-டெக்  இன் தயாரிப்பு வரிசை கட்டுமானம், சுகாதாரம், பிளம்பிங், தொழில்துறை மற்றும் நுகர்வோர் தாமாகவே ஆற்ற வேண்டிய கருமங்களில் விருப்பமான தீர்வுகளாகவுள்ளன. 

வி-டெக் என்ஜினியரிங் (பிறைவேட்) லிமிடெட், இலங்கை சந்தையின் ஒவ்வொரு துறையிலும் புகழ்பெற்ற மற்றும் நன்கு அறியப்பட்ட மறுவிற்பனையாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அசல் வி-டெக் வர்த்தகநாம தயாரிப்புகளை வழங்குகின்றது. 

வி-டெக் என்ஜினியரிங் (பிறைவேட்) லிமிடெட் நிர்வாக இயக்குனர் திரு பைசல் புஹாரி,் தரமான வர்த்தக நாமம் கொண்ட தயாரிப்புகளை இறக்குமதி செய்து வழங்குவதில் நற்பெயரைக் கொண்டவர், வி-டெக் வரிசைகள்்் பிசின், சீலண்ட் மற்றும் நீர்ப்புகா தயாரிப்புகளுக்கான ஏக விநியோக உரிமையைப் பெற்றுள்ளது. 

பைசல் புஹாரி கருத்துக் கூறுகையில் வி-டெக் என்ஜினியரிங்கின் 24/7பிரத்தியேக ஹொட்லைன் மூலம் அல்லது நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் வி-டெக் தயாரிப்புகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறினார்.   

 

Comments