ஏக்கம் | தினகரன் வாரமஞ்சரி

ஏக்கம்

சண்டை பிடித்துக் கொண்ட  
இரவொன்றில் இருந்து  
தொடங்கியது  
என்னை போர்த்திக் கொண்ட  
நிறை மாத மௌனம்!  
நீருள் அமிழும் இரும்பாய்  
உன்னோடு பேசிக் கொண்டிருந்த  
வார்த்தைகள்,  
புதைந்து கொண்டிருக்க – என்  
மனக்கடல் எங்கும்!  
என் வானத்தை நிறைக்கும்  
நட்சத்திரம் – நீ  
முகில் திரளாய் ஒட்டியிருக்கிறது  
என் வாழ்க்கை!  
எதார்த்த சந்திப்பில் நிகழ்ந்த  
உரையாடல் போல்  
அன்பை பரிமாறி விட்டு  
சென்று விட்டாய்!  
இப்போதுவரை  
கரை முட்டும்  
அலை நான்  
எங்கும் விரிந்து கிடக்கு  
உன்னை பற்றிய  
எனது ஏக்கம்!  
 
நி. லவன்
 

Comments