வாஸ்கொட காமா | தினகரன் வாரமஞ்சரி

வாஸ்கொட காமா

1498-ஆம் ஆண்டு இந்தியாவில் கால் பதித்து ஐரோப்பாவின் கனவை நனவாக்கினார் ஒரு போர்ச்சுக்கீய நாடுகாண் ஆர்வலர். அவர்தான் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு கடல்மார்க்கத்தைக் கண்டுபிடித்து வரலாற்றில் தடம் பதித்த வாஸ்கொட காமா. 1460-ஆம் ஆண்டு போர்ச்சுக்கலின் Sines என்ற இடத்தில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார் வாஸ்கொட காமா. அவரது தந்தை Estevao da Gama புதிய நாடுகளைக் கண்டுபிடிப்பதில் ஆர்வமாக இருந்தவர். இந்தியாவிற்கு கடல்மார்க்கத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று முயன்றவர்களில் அவரும் ஒருவர். ஆனால் அக்கனவு நிறைவேறாமலேயே அவர் இறந்துபோனார். தன் கனவை மகன் நனவாக்குவான் என்று அப்போது அவருக்கு தெரிந்திருக்காது. அவரது மறைவிற்கு பின்னர் போர்த்துக்கேய மன்னர் இரண்டாம் ஜோன் அப்பணியை முடித்துத் தருமாறு வாஸ்கொட காமாவைக் கேட்டுக்கொண்டார்.  

சிறந்த பள்ளியில் படித்த வாஸ்கொட காமா கடற்படை அதிகாரியாக சிறிது காலம் பணியாற்றினார். எனவே இந்தியாவிற்கான கடல் மார்க்கத்தைக் கண்டுபிடித்து வருமாறு மன்னர் தன்னை பணித்தபோது அதனை மகிழ்ச்சியுடன் ஏற்று அதனை செய்துமுடிக்க புறப்பட்டார். 1497-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் திகதி போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனிலிருந்து நான்கு கப்பல்கள் புறப்பட்டன. கிட்டதட்ட 90நாட்கள் நிலத்தையே காணாமல் கடலில் பயணம் செய்த அவர்கள் அந்த ஆண்டு நவம்பர் 22-ஆம் திகதி ஆபிரிக்காவில் தென்கோடியிலுள்ள நகரை அடைந்தனர். அதன்பிறகு ஆபிரிக்காவின் கரையோரமாக வடக்கு நோக்கி பயணத்தைத் தொடங்கினர்.  

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பிய வாஸ்கொட காமாவை மகிழ்ச்சியுடன் வரவேற்ற மன்னர் அவருக்கு பெரும் பொருளை பரிசாக தந்தார். அதோடு இந்தியப் பெருங்கடலின் தளபதி என்ற பட்டத்தையும் தந்து கெளரவித்தார்.  

மூன்றாவது முறையாக இந்தியா வந்தபோது இந்தியாவுக்கான அரச பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். வாஸ்கொட காமா அங்குவந்த சில மாதங்களில் நோய்வாய்ப்பட்டு 1524-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் திகதியன்று கோழிக்கோட்டில் காலமானார்.

சுஸ்மிதன் ஆனந்தன்,
தரம் 12, நோர்வூட் தமிழ் ம.வி.,
நோர்வூட்.

Comments