வர்ணம் தீட்டுபவர்களை ஊக்குவிக்கும் கோஸ்வே பெயின்ட் கிளப் அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

வர்ணம் தீட்டுபவர்களை ஊக்குவிக்கும் கோஸ்வே பெயின்ட் கிளப் அறிமுகம்

25ஆண்டுகளாக இலங்கையின் வர்ணம் தீட்டும் கலையை புதுப்புது  வர்ணங்களால் அலங்கரிப்பதற்கு பங்களிப்பு செய்த கோஸ்வே பெயின்ட் நிறுவனம் காலத்துக்கேற்ப பெயின்ட் கைத்தொழிலில் புதிய  தடங்களை பதிக்கும் பொருட்டு கோஸ்வே எக்சலன்ட் கிளப் வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கோஸ்வே பெயின்ட் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள வர்ணம் தீட்டுபவர்களுக்கான மேற்படி லோயல்ட்டி நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் வெகுவிமர்சையாக கொழும்பு மெரீனாபீச் ஹோட்டலில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. 

மேற்படி நிகழ்ச்சித்திட்டத்தில் நாடெங்கிலும் உள்ள சுமார் 650வர்ணம் தீட்டும் பணியாளர்கள் கலந்துகொண்டார்கள். வர்ணம் தீட்டுபவர்கள் கோஸ்வே பெயின்ட் கொள்வனவு செய்யும் எல்லா சந்தர்ப்பங்களிலும் அவர்களின் கொள்வனவுகளுக்கு புள்ளிகள் வழங்கப்படும் செயன்முறையொன்றின் மூலம் முறையாக தயாரிக்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சித் திட்டமானது, அவர்கள் பெறும் புள்ளிகளின் கூட்டுத்தொகையை கருத்தில்கொண்டு காலத்துக்கேற்ப அன்பளிப்புகள் வழங்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோஸ்வே பெயின்ட் நிறுவனத்தின் வெற்றிக்கு பின்னால் உள்ள முதன்மையான சக்தியாக விளங்கும் நாடெங்கிலுமுள்ள வர்ணம் தீட்டுபவர்களைப் பாராட்டி கெளரவிப்பதற்கு இவ்வாறான நிகழ்ச்சித் திட்டமொன்றை ஏற்பாடு செய்தமை தொடர்பாக தான் பெரிதும் மகிழ்ச்சி அடைவதாக இங்கு கருத்து தெரிவித்தார் டொம்தோமஸ். இலங்கையின் முன்னணி வர்ணப்பூச்சுகள் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனமான கோஸ்வே பெயின்ட் நிறுவனம் மக்கள் மனங்களை வென்று வெற்றி நடைபோட காரணம் நம்பிக்கையும் அதன் தரமுமே ஆகும். மோட்டார் வாகனங்கள், கைத்தொழில்கள் மற்றும் குடிமனைகள் உள்ளிட்ட பலதையும் புதுப்பிப்பதற்கு கோஸ்வே பெயின்ட்களை மக்கள் நம்பிக்கையுடன் பாவிக்கின்றார்கள்.   

Comments