Singer Green Inverter வளிச்சீராக்கிகள் சந்தையில் | தினகரன் வாரமஞ்சரி

Singer Green Inverter வளிச்சீராக்கிகள் சந்தையில்

Singer நிறுவனம் Singer Green Inverter வரிசையை உள்நாட்டு வளிச்சீராக்கி துறைக்கு அறிமுகப்படுத்தியதன் மூலம் சூழல் நட்புறவு நிறுவனமாக தன்னை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. பசுமைப் புரட்சியை முழுமையாகத் தழுவுவதற்கான சிங்கரின் தூரநோக்கு பார்வையை சிங்கர் வளிச் சீராக்கிகளின் green inverter தயாரிப்புகள் பிரதிபலிக்கின்றன.  

Singer Green Inverter வளிச்சீராக்கி தொடரானது உலகின் மிகவும் சூழல் நட்பு குளிர் பதனூட்டியான (R32) ஐ பயன்படுத்துவதன் மூலம் சூழல் நட்புறவான அதிக ஆற்றல் திறனை அடைய உதவுகின்றது. இது புவி வெப்பமடைதலைக் குறைப்பதன் மூலம் 0%ஓசோன் சிதைவு திறன் மற்றும் குறைந்தபட்ச சுற்றுச்சூழல் தாக்கத்தை உறுதி செய்கிறது.  

Singer Sri Lanka PLC இன் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் குமார் சமரசிங்க இது தொடர்பில் விளக்கமளிக்கையில் எமது நுகர்வோர் அனைவருக்கும் ஆடம்பரத்தை வழங்கும் அதேவேளை பசுமைப் புரட்சியின் உறுதியான ஊக்குவிப்பாளராகும் சிங்கரின் முயற்சியானது, சில்லறை அல்லது உள்ளூர் சந்தைகளிலும், green inverter உற்பத்திகளை ஊக்குவிக்கும் முயற்சியின் மூலம் ஊர்ஜிதமாகின்றது என்றார். சிங்கரின் green inverter வளிச் சீராக்கிகள் 50%சக்தியை சேமிக்கின்றன. இலங்கையில் நிலவும் வானிலை மற்றும் எரிசக்தி செலவினங்களின் மேலதிக போக்கு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, தகுந்த நீடித்து நிலைக்கும், செலவு குறைந்த வளிச்சீராக்கி தீர்வுகளை நுகர்வோருக்கு வழங்க வேண்டியது அவசிய தேவையாகின்றது. அந்த வகையில், சிங்கரின் green inverter உற்பத்தி வரிசையானது வளிச் சீராக்கிக்கான மொத்த செலவை குறைப்பதோடு, மின் பாவனையை குறைக்கும் வளிச் சீராக்கி தீர்வுகளை எதிர்ப்பார்க்கும் நுகர்வோருக்கு சிறந்த தெரிவாகும்.  

Singer Sri Lanka PLC அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் தீர்வுகளை வழங்க உறுதிபூண்டுள்ளதுடன், இது எம்மை துறைசார் போட்டியாளர்களுக்கு மத்தியில் உயர்ந்து நிற்கச் செய்வதாக மேலும் குறிப்பிட்டார்.

Comments