அவளோர் அஞ்சுகம் | தினகரன் வாரமஞ்சரி

அவளோர் அஞ்சுகம்

பனியின் மென்மை
அவளது பேச்சில்
கனியின் இனிமை
அவளது பார்வையில்
துணிவின் வலிமை
நிமிர்ந்த நந்நடையில்
பணிவின் தூய்மை
அவளது செயலில்
ஆதர்ச பெண்ணவள்
அன்பின் வடிவமவள்
பூதலத்தின் பொன்னவள்
பொற்புடை மாதவள்
நிலம்பார்த்து நடப்பவள்
நித்திலமாய் ஜொலிப்பவள்
நலம்நாடி நிற்பவள்
நாணயம் காப்பவள்
மானம் காத்து
வாழ்வதில் பத்தினி
தானம் கொடுப்பதில் 
அவளோர் உத்தமி
என்மன வானில்
அவளோர் அஞ்சுகம்
அவளால் கிடைப்பதே
ஒப்பில்லா நற்சுகம்!
 
அலிறிஸாப், 
அக்குறணை

Comments