10 ஆண்டு பூர்த்தியை கொண்டாடுகின்றது ரெலா இன்ஸ்டிடியூட் மெடிக்கல் சென்டர் | தினகரன் வாரமஞ்சரி

10 ஆண்டு பூர்த்தியை கொண்டாடுகின்றது ரெலா இன்ஸ்டிடியூட் மெடிக்கல் சென்டர்

புற்றுநோய் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு மருத்துவ, அறுவை சிகிச்சை சார்ந்த மற்றும் ஸ்டெம்செல் மாற்றுப்பதிய சேவையை வழங்குகின்ற உயர் பயிற்சி பெற்ற பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய மருத்துவ நிபுணர்கள் குழுவை குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை மையம் கொண்டிருக்கிறது. மாற்றுப்பதிய சிகிச்சை செய்து கொண்டிருக்கின்ற குழந்தைகள், வேறு பிறகுழந்தைகளைப் போலவே இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இக்கொண்டாட்டம், அதற்கான ஒரு சான்றாகும் என்று குறிப்பிட்டார்.  

10ஆண்டுகளுக்கு முன்பு 5மாத குழந்தையான பூனம், பிறக்கும் போதே தனக்கு இருந்த கல்லீரல் நோய்க்கு தீர்வு காணவும் மற்றும் கல்லீரல் மாற்றுப் பதியத்திற்கான சாத்தியத்தை ஆராயவும், பேராசிரியர் முஹம்மது ரெலாவை சந்திப்பதற்காக தனது பெற்றோர்களுடன் இந்தியாவின் சென்னை மாநகருக்கு பயணித்தாள். இந்தியாவில் உள்ளூர் மக்களுக்கு பெரிதும் பயன்படக்கூடியவகையில் கல்லீரல் மாற்றுப்பதிய செயல்திட்டம் ஒன்றை தொடங்குவதற்காக லண்டனில் கிங்ஸ் காலேஜ் மருத்துவமனையில் 22ஆண்டுகள் பணியாற்றியதற்குப் பிறகு சென்னைக்கு பேராசியர் ரெலா இடம்பெயர்ந்தார். சிறுவயது குழந்தைகளிடம் கல்லீரல் மாற்றுப்பதியம் என்பது மிகவும் அரிதான சிகிச்சை முறையாக இருந்தகாலம் அது. இந்தியாவில் சிறுகுழந்தைகளுக்கு அப்போது யாருமே கல்லீரல் மாற்றுப்பதிய சிகிச்சையை செய்ய முற்படவில்லை. குழந்தை பூனத்தின் பெற்றோர்கள், மாற்றுப்பதிய சிகிச்சையை செய்வது என்ற தைரியமான முடிவை எடுத்தார்கள்.

இக்குழந்தையின் தந்தை, இலங்கை விமானப்படையில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், இலங்கை விமானப்படையானது, இவர்களுக்கு நிதியுதவியின் மூலம் பெரும் ஆதரவை வழங்கியது. தற்போது பள்ளிக்கு செல்லும் 10வயது சிறுமியாக இருக்கும் பூனம், பிற எந்தக் குழந்தைகளையும் போல வாழ்க்கையை அனுபவித்து வருகிறாள். மாற்றுப்பதியத்திற்கு பிந்தைய கவனிப்பு சேவைக்காக இலங்கையிலுள்ள மருத்துவர்கள் இவளை கண்காணித்து வருகின்றனர். இதற்குப் பிறகு இலங்கை நோயாளிகளிடமும் மற்றும் மருத்துவர்களிடமும் பேராசிரியர் ரெலா மற்றும் அவரது குழுவினர் உருவாக்கிய ஒத்துழைப்பு செயற்பாட்டின் வழியாக பல இலங்கை குடிமக்கள் சிறப்பாக பலனடைந்திருக்கின்றனர்.  

மருத்துவத்தில் உயர் நேர்த்தியான சிகிச்சையை வழங்குவதற்கு இலங்கையுடன் 10ஆண்டுகள் வெற்றிகரமான ஒத்துழைப்பை நினைவுகூறும் விதமாகவும் மற்றும் உரிய கால அளவில் மாற்றுப்பதிய சிகிச்சைக்கு பரிந்துரைப்பு செய்த மற்றும் மாற்றுப்பதியத்திற்குப் பிறகு இந்நாட்டின் உள்ளூர் அளவில் பின்தொடர் கண்காணிப்பு சிகிச்சையை வழங்கி வருகின்ற மருத்துவர்களுக்கு நன்றி கூறும் வகையிலும் இக்கொண்டாட்டம் மேற்கொள்ளப்படுகிறது.  

டாக்டர் ரெலா இன்ஸ்டிடியூட் மற்றும் மெடிக்கல் சென்டரின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான பேராசிரியர் முஹம்மது ரெலா இது தொடர்பாக பேசுகையில், உள்நாட்டு மக்களுக்கு குறைக்கப்பட்ட செலவில் இந்த தனித்துவமான சேவையை வழங்க வேண்டும் என்பதற்காக சென்னையில் ஈரல் மாற்றுப்பதிய சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்டது.

நமது அண்மை நாடுகளைச் சேர்ந்த நோயாளிகள் மத்தியிலும் இத்தகைய சேவைகளுக்கான தேவை மிக அதிக அளவில் இருந்தது. கடந்த 10ஆண்டுகளில் இலங்கையைச்் சேர்ந்த நோயாளிகளுக்கு 100ஈரல் மாற்றுப்பதிய சிகிச்சைகளை (52வயது வந்த நபர்கள், 48குழந்தைகள்) நாங்கள் செய்திருக்கிறோம். இந்தியாவிலும் மற்றும் 30-க்கும் மேற்பட்ட பிற நாடுகளிலிருந்தும் 2400-க்கும் அதிகமான நோயாளிகளுக்கு எனது குழுவினர் அறுவை சிகிச்சையினை செய்திருக்கின்றனர். மேற்கத்தைய நாடுகளில் அவர்களுக்கு ஆகின்ற செலவில் சுமார் பத்தில் ஒரு பங்கு செலவில் சர்வதேச தர நிலைகளுக்கு நிகரான சிகிச்சை விளைவுகளுடன் இச்சிகிச்சைக்கான விருப்பத்தேர்வுகளுக்கு அணுகும் வசதியை நோயாளிகள் கொண்டிருக்கின்றனர் என்பது கூடுதல் ஊக்கமளிக்கும் அம்சமாகும்.

மிகநவீன, மேம்பட்ட சேவைக்கான அதிகரித்துவரும் தேவையின் காரணமாக, 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் டாக்டர் ரெலா இன்ஸ்டிடியூட் மெடிக்கல் சென்டர் என்ற பெயரில் ஒரு பன்முக சிறப்பு சிகிச்சை மருத்துவமனையை நாங்கள் தொடங்கினோம். பல்வேறு உடலுறுப்புகளுக்கான மாற்றுப்பதிய சிகிச்சை மேற்கொள்ளும் வசதியுடன் (ஈரல், சிறுநீரகம், எலும்புமச்சை, கணையம், சிறுகுடல், கர்ப்பப்பை) இதய அறிவியல், மலட்டுத்தன்மைக்கான சிகிச்சை, எலும்புமுறிவியல் மற்றும் முதுகுத்தண்டு சிகிச்சை, மூளை நரம்பியல் மற்றும் மூளை அறுவை சிகிச்சை, இரைப்பை குடலியல் அறுவைசிகிச்சை, கதிரியக்க சிகிச்சை மற்றும் புற்றுநோய் ஆகியவை உட்பட பல்வேறு சிறப்பு பிரிவுகளிலும் மிக விரிவான சிகிச்சை சேவைகள் இங்கு வழங்கப்படுகின்றன என்று கூறினார்.  

கடந்த ஆண்டில் KIMC தொடங்கப்பட்டதற்குப் பிறகு செய்யப்பட்ட 206ஈரல் மாற்றுப்பதிய சிகிச்சைகளில் 22இலங்கை நோயாளிகளுக்காக செய்யப்பட்டிருக்கிறது (8வயது வந்த நபர்கள், 14சிறார்கள்).  

ரெலா இன்ஸ்டிடியூட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரிவின் இயக்குனரும், குழந்தைகளுக்கான ஈரல் சிறப்பு நிபுணருமான டொக்டர் நரேஷ் சண்முகம் பேசுகையில், குழந்தைகள் மீது நாங்கள் எப்போதுமே சிறப்பு கவனம் கொண்டிருக்கிறோம். கடந்த 10ஆண்டுகளில் 98சதவிகித வெற்றி விகிதத்துடன், இலங்கையைச் சேர்ந்த சுமார் 48குழந்தைகள் ஈரல் மாற்றுப்பதிய சிகிச்சையை வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கின்றனர். சிறுகுழந்தைகளிடமும் கூட ஈரல், சிறுநீரகம், சிறுகுடல் மற்றும் எலும்பு மச்சை போன்ற பல்வேறு உடலுப்பு மாற்றுப்பதியத்திற்கு ஆதரவு தர குழந்தைகளுக்கான மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான எமது சிகிச்சைத் திட்டம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

புற்றுநோய் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு மருத்துவ, அறுவை சிகிச்சை சார்ந்த மற்றும் ஸ்டெம்செல் மாற்றுப்பதிய சேவையை வழங்குகின்ற உயர் பயிற்சி பெற்ற பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய மருத்துவ நிபுணர்கள் குழுவை குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை மையம் கொண்டிருக்கிறது. மாற்றுப்பதிய சிகிச்சை செய்து கொண்டிருக்கின்ற குழந்தைகள், வேறு பிறகுழந்தைகளைப் போலவே இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இக்கொண்டாட்டம், அதற்கான ஒரு சான்றாகும், என்று குறிப்பிட்டார்.  

இந்நிகழ்ச்சியின் போது டொக்டர். ரெலா இன்ஸ்டிடியூட் மற்றும் மெடிக்கல் சென்டரின் மருத்துவ ஆலோசனை குழுவின் துணைத்தலைவரும், ஈரல் மற்றும் சிறுநீரக மாற்றுபதிய அறுவைசிகிச்சை நிபுணருமான டொக்டர். கோமதி நரசிம்மன் பேசுகையில், இலங்கையைச் சேர்ந்த எமது மாற்றுப்பதிய சிகிச்சை நோயாளிகள், பல்வேறு பொருளாதார நிலைகளைச் சேர்ந்த, வேறுபட்ட வயது பிரிவு மற்றும் சமூக பின்னணி கொண்டவர்களாக இருக்கின்றனர். மாணவர்கள், ஆசிரியர்கள், வங்கி அதிகாரிகள், மருத்துவர்கள், தொழில் அதிபர்கள், அரசு பணியாளர்கள், குடும்பத் தலைவிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் இதில் உள்ளடங்குவர்.

நோயாளிக்கு நேர்த்தியான வாழ்க்கை தரத்தையும், உற்பத்தி திறனையும் தருகின்ற நல்ல ஆரோக்கிய நிலைக்கு அவரை மீண்டும் கொண்டு செல்வதற்கு நோயாளிகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழு ஆகியோரின் ஒருங்கிணைந்த முயற்சிகளை காண்பது அதிக மகிழ்ச்சியும், திருப்தியும் அளிக்கிறது. இலங்கை அரசின் தாராள குணம்,அ திபரின் நிதியம் மற்றும் கிரெளட் ஃபண்டிங் மற்றும் என்.ஜி.ஓ ஃபண்டிங் வழியாக வசதியற்ற நோயாளிகளுக்கு நிதியுதவி வழங்கிய இலங்கை மக்கள் ஆகியோர் இந்த பெருமைக்கும், பாராட்டுக்கும் உரியவர்கள் என்று கூறினார்.  

இந்நோயாளிகளுக்கு தொடர்ந்து பல ஆண்டுகளாக பின்தொடர் சிகிச்சை மற்றும் கவனிப்பை எங்களால் வழங்க முடிந்திருக்கிறது என்பது எங்களது குழு பெருமைக்கொள்ளக்கூடிய மற்றொரு மிக முக்கியமான அம்சமாகும். தேவையுள்ள நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சையை வழங்கி, இலங்கையில் ஈரல்் மாற்றுப்பதிய சிகிச்சையின் விளைவை மேம்படுத்த உதவியிருக்கிற இலங்கை மருத்துவர்களுடனான எமது மிக அர்த்தமுள்ள, பரஸ்பர ஆதாயமளிக்கக்கூடிய தொழில் முறை நல்லுறவு மற்றும் இரண்டாவதாக இலங்கையில் தற்போது எங்களது நாட்டு அலுவலகமாக செயல்படும் ஃபோர்டே இன்டர்நேஷனல், கொழும்பு என்ற எங்களது இலங்கை ஒத்துழைப்பாளர்களால் வழங்கப்படும் சிறப்பான நிர்வாக மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ஆதரவு ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களின் காரணமாக இது சாத்தியமாகியிருக்கிறது என்று குறிப்பிட்டார்.  

மருத்துவ ஆலோசனைகுழுவின் தலைவர் டொக்டர். இளங்குமரன் கலியமூர்த்தி, KIMC மற்றும் அது வழங்கக்கூடிய சேவை வசதிகள் குறித்து கூறியதாவது: KIMC ல் எமது தனித்துவ சிறப்பு என்னவென்றால், அனைத்து சிறப்பு பிரிவுகளிலும் நிலவுகின்ற பல்துறைகளுக்கு இடையிலான குழு பணி மற்றும் அடிப்படை சிகிச்சையிலிருந்து நான்காம் நிலை என்ற உயர்சிகிச்சை வரை எங்களால் வழங்கக்கூடிய மருத்துவ சேவையின் விரிவான தொகுப்பாகும். 14அறுவை சிகிச்சை அரங்குகளையும், 450படுக்கை வசதிகளையும் எமது மருத்துவமனை கொண்டிருக்கிறது. இவைகளில் ஒவ்வொரு சிறப்பு பிரிவிற்கும் பிரத்தியேக மருத்துவர்கள் குழுவோடு கூடிய சிறப்பு பிரிவு அடிப்படையிலான ஐசியு தீவிர சிகிச்சைப்பிரிவில் 130படுக்கைகள் உள்ளடங்கும்.

இதற்கும் கூடுதலாக, தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் ஆராய்ச்சி மற்றும் கல்விசார் நடவடிக்கைகள், மிக சிக்கலான மருத்துவ சூழல்களிலும் சான்றுகள் அடிப்படையிலான சிகிச்சைகளையும், தீர்வுகளையும் வழங்க எங்களுக்கு உதவுகின்றன,  

ரெலா இன்ஸ்டிடியூட் இலங்கை அலுவலகம்  

ரெலா இன்ஸ்டிடியூட் இலங்கை அலுவலகம் என்பது, இந்தியா, சென்னை, டொக்டர் ரெலா இன்ஸ்டிடியூட் மெடிக்கல் சென்டருக்கான ஃபோர்டே குழும நிறுவனங்களின் கீழ் செயல்படக்கூடிய ஒரு தகவல் மற்றும் ஏற்பாடு வசதி மையம் (இலங்கை அலுவலகம்) ஆகும்.  

ஃபோர்டே இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் என்பது இந்துறையில் 15ஆண்டுகளுக்கும் மேற்பட்ட உயர்நிலை மருத்துவ சேவை வழங்குபவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு நிறுவனம் ஹெல்த்கேர் தொழிலில் தன்னை உறுதியாக நிலை நாட்டிக்கொண்ட காரணத்தினால் ஃ போர்டே இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவில் உள்ள மருத்துவ தொழில்வல்லுனர்கள் மற்றும் மருத்துவர்களின் ஆதரவுடன் ஸ்ரீலங்கா நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சையளித்து சேவையாற்றும் பணியை மேற்கொள்வதற்கு இந்தியா, சென்னையில் உள்ள டொக்டர் ரெலா இன்ஸ்டிடியூட் மெடிக்கல் சென்டரால் இலங்கை அலுவலகம் (ஃபோர்டே இன்டர்நேஷனல்) நியமிக்கப்பட்டது.  

டாக்டர் ரெலா இன்ஸ்டிடியூட் மெடிக்கல் சென்டர்:  

ஒரு சர்வதேச மருத்துவ ஃபெசிலிட்டியான டொக்டர் ரெலா இன்ஸ்டிடியூட் மெடிக்கல் சென்டர் (KIMC ) இந்தியாவிலிருந்தும் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்தும் ஒரு பல்வேறுபட்ட நோயாளிகளின் தேவைகளை கவனித்து, சேவையாற்றுவதற்கு அர்ப்பணி​த்துக்கொண்ட ஒரு உயர்நிலை மருத்துவ சிகிச்சை மருத்துவமனையாகும்.  இந்தியா, தமிழ்நாடு, சென்னை, குரோம்பேட்டையில் 36ஏக்கர் கொண்ட ஒரு பரந்த நிலப்பரப்பில் அமைந்திருக்கும் ஒரு பல் உயர்நிலை சிறப்பு மருத்துவ மனையாகும்.

Comments