சிறுவர்களுக்கே விளையாட்டு | தினகரன் வாரமஞ்சரி

சிறுவர்களுக்கே விளையாட்டு

விளையாட்டு என்பது குழந்தைகளுக்கு அவசியமான ஒரு பயிற்சியாகும். ஏனெனில் வளரும் குழந்தைகளுக்கு உடலை வலிமைப்படுத்துவதற்கும், உடல் வளர்ச்சியடைவதற்கும், உறுப்புகள் நன்கு செயல்படுவதற்கும், உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறுவதற்கும் ஏற்றதொரு உடற்பயிற்சி விளையாட்டு ஆகும்.  ஆனால் இன்றைய குழந்தைகள் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. அவர்களுக்கு படிப்பதற்கே நேரம் போதவில்லை. இந்நிலையில்  அவர்கள் எங்கே விளையாடுவது?

அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும்  பெற்றோர் அவர்களை பெரும்பாலும் விளையாடுவதற்கு அனுமதிப்பதில்லை. அப்படியே விளையாடினாலும் அவர்கள் விளையாடுவது மின்னணு சாதனங்களோடுதான்.   பல  குழந்தைகள்  பெரியோர்களைப் போலவே மன உளைச்சல், மன அழுத்தம் போன்ற துன்பங்களுக்கு ஆளாகிறார்கள். அரசும், ஆசிரியர்களும், பெற்றோரும் இந்த கருத்தை உணர்ந்து ஓரளவாவது குழந்தைகளுக்கு விளையாட அனுமதிப்பது அவர்களுக்கு நன்மை பயக்கும். எனவே இதனை நன்கு உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் சிறுவர்களுக்கு விளையாட வாய்ப்பு அளிப்போம்.

சோ. வினோஜ்குமார்,
தொழிநுட்ப பீடம்,
யாழ். பல்கலைக்கழகம்,
கிளிநொச்சி.

Comments