கோட்டாபய ராஜபக்‌ஷ எந்த வகையிலும் எமக்கு சவாலல்லர் | தினகரன் வாரமஞ்சரி

கோட்டாபய ராஜபக்‌ஷ எந்த வகையிலும் எமக்கு சவாலல்லர்

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக என்னதான் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே தமது உண்மையான விருப்பமாகும் என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

கோட்டாபய ராஜபக்‌ஷ எந்த விதத்திலும் தமக்கு சவாலானவர் அல்லர் என்றும் தொலைத் தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவின் குடியுரிமைக்குச் சவால் விடுக்கும் மனு விடயத்தில், ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த எவருக்கும் தொடர்பில்லை என்றும் அமைச்சர் கூறினார். 

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வொஷ்சோல் வீதி, தேர்தல் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (04) உரையாற்றிய அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ஐக்கிய தேசிய கட்சியானது இலங்கை அரசியலில் 70 ஆண்டுகால ஒப்பற்ற வரலாற்றைக் ெகாண்ட ஒரு கட்சி என்ற வகையில், எந்தவொரு வேட்பாளரின் பாதையிலும் தடங்கலை ஏற்படுத்த வேண்டிய தேவை கிடையாது என்றும் கூறினார். 

"நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கு முன்னர் நாம் கட்சியில் உள்ளக ஜனநாயக பெறுமானங்களை வலுப்படுத்தியுள்ளோம். கட்சித் தலைவரின் ஆசிர்வாதத்துடன் தற்போது வெற்றிப் பயணத்தை முன்னெடுக்கின்றோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல்வாதிகள் நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று கூறிக்ெகாண்டு ஸ்திரமற்ற நிலையைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றார்கள்" என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். (வி)

நமது நிருபர்   

Comments