சு.கவின் தனித்துவம் இழக்கும் வகையில் எந்த தீர்மானமும் எடுக்கப்படமாட்டாது | தினகரன் வாரமஞ்சரி

சு.கவின் தனித்துவம் இழக்கும் வகையில் எந்த தீர்மானமும் எடுக்கப்படமாட்டாது

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், சு.கவின் தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று (4), ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இதில், நாடு முழுவதுமுள்ள அனைத்து சு.கவின் அமைப்பாளர்களும் கலந்துகொண்டுள்ளனர். இச்சந்திப்பில் “பொதுச் சின்னம் இல்லாது பொதுஜன பெரமுனவுடனான கூட்டணிக்கு ஒருபோதும் இணக்கம் எட்டப்படக் கூடாது.

சு.கவின் தனித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும். அதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து சவால்களையும் முறியடித்து தேர்தலில் போட்டியிட முன்வர வேண்டும்” என சு.கவின் அமைப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 “கூட்டணி பேச்சுகள் அனைத்தும் சு.கவின் தனித்துவத்தைப் பாதுகாக்கும் வகையிலும் கட்சியின் அடிமட்ட தொண்டர்களது எதிர்பார்ப்பின் பிரகாரமும்தான் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சு.க அதன் தனித்துவத்தை இழக்கும் வகையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படாது” எனவும் ஜனாதிபதி, தொகுதி அமைப்பாளர்களுக்கு வாக்குறுதியளித்துள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன் 

Comments