பிரபல தத்துவஞானி சாக்ரடீஸுக்கு ஏற்பட்ட நோய் | தினகரன் வாரமஞ்சரி

பிரபல தத்துவஞானி சாக்ரடீஸுக்கு ஏற்பட்ட நோய்

சாக்ரடீஸ் பிரபல தத்துவ ஞானி. இவர் பிரேசில் அணியின் கெப்டனாக இருந்தவர். எனவே கால்பந்து ரசிகர்களுக்கு நிச்சயம் நினைவிருக்கும். உலகில் தலைசிறந்த ‘மிட்ஃ பீல்டர்களில் ஒருவர் என புகழ்பெற்றவர். இரண்டு உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடினார். ஆறு அடி நான்கு அங்குலம் உயரம் கொண்ட ஆரோக்கியமான இந்த மனிதர்.  

மேலும், சாக்ரடீஸ் ஏழு குழந்தைகளுக்கு தந்தை, பல நாளிதழ்களுக்கு தொடர்ந்து எழுதி வந்தார். விளையாட்டுச் செய்திகளை மட்டுமல்ல, அரசியல் பொருளாதாரக் கட்டுரைகளையும் எழுதியவர். இறக்கும் கால கட்டத்தில்கூட பிரேசிலில் 2014ல் நடக்க இருக்கும் கால்பந்து உலகக் கோப்பையை அடிப்படையாகக் கொண்ட கதை நூல் ஒன்றை எழுதிக் கொண்டிருந்தார்.  

இன்னும் ஒரு மருத்துவ டாக்டருக்கு கூட பிரபல கால்பந்து வீரர்களின் டாக்டராக இருந்த ஒருவர் எனலாம். அதுவும் ஒருபுரம் கால்பந்துப் போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்டே மறுபுறம் மருத்துவப் படிப்பையும் முடித்து சாதனையைச் செய்தவர். அதுமட்டுமல்லாமல் அப்போது பிரேசிலில் நடைபெற்ற இராணுவ அரசுக்கு எதிராக ஜனநாயக அமைப்பொன்றை உருவாக்கினார்.  

குடலில் ஏற்பட்ட தொற்று ஒன்றினால் பிரேசிலில் உள்ள ‘சாலோ பாலோ’ (Sawoporlo) மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். இவரது ‘குடல்தொற்று’ ஏற்பட்டதற்கு (Food poison) அதாவது உணவில் கலந்திருந்த ‘நச்சுப்’ பொருளே காரணம் என தெரிவிக்கப்பட்டது.  

நூர்ஹலீனா ஹமீட்  
மருதானை, கொழும்பு- 10. 

Comments