இல்லங்களில் பேக்கிங் செயற்பாடுகளில் ஈடுபடுவோரின் தரத்தை மேம்படுத்தும் Singer - AB Mauri | தினகரன் வாரமஞ்சரி

இல்லங்களில் பேக்கிங் செயற்பாடுகளில் ஈடுபடுவோரின் தரத்தை மேம்படுத்தும் Singer - AB Mauri

தேசத்தின் முன்னணி நுகர்வோர் சாதனப் பொருட்கள் விற்பனையாளராக சிங்கர் (ஸ்ரீ லங்கா), பேக்கிங் மூலப்பொருட்கள் விற்பனையில் முன்னணியில் திகழும் AB Mauri லங்கா உடன் கைகோர்த்து, இல்லங்களில் பேக்கிங் செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு, சிங்கரின் உலகத் தரம் வாய்ந்த Beko, Kenwood சாதனங்களை அனுபவிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் 30வருட காலத்துக்கு மேலான பிரசன்னத்தைக் கொண்டுள்ள AB Mauri, பேக்கரி உற்பத்தியாளர்கள், இல்லங்களில் பேக்கரி செயற்பாடுகளில் ஈடுபடுவோரின் திறன்களை மேம்படுத்துவதில் பங்களிப்பு வழங்கி வருகின்றது. கல்கிசையில் AB Mauri பேக்கரி பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. இது NVQ Level 03மற்றும் City & Guilds தரப்படுத்தலைப் பெற்ற நிலையமாகும். இதில் துறையின் முன்னணி சமையல் கலை நிபுணர்கள் மற்றும் நவீன பேக்கரி சாதனங்களைக் கொண்டு, ஆரம்பநிலை மற்றும் அனுபவம் வாய்ந்த பேக்கரி செயற்பாட்டாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.  

நவீன Beko, Kenwood சாதன தெரிவுகளை சிங்கர் ஸ்ரீ லங்கா விநியோகித்த வண்ணமுள்ளது. இதில் freestanding ovens மற்றும் சமையலறை இயந்திர சாதனங்கள் போன்றன அடங்கியுள்ளன. AB Mauri பேக்கரி பயிற்சி நிலையத்துக்கு வழங்கப்பட்டுள்ள இந்த சாதனங்களின் உதவியுடன், சிறியளவிலான பேக்கரி செயற்பாட்டாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இந்த பயிற்சிகளின் போது, இந்த நவீன சாதனங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த பயிற்சிகளை பெற்றுக் கொள்வார்கள். மேலும், AB Mauri பேக்கரி மூலப்பொருட்களின் பாவனை பற்றிய விளக்கங்களை பெற்று, உயர் தரம் வாய்ந்த பேக்கரி தயாரிப்புகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றி அறிந்து கொள்வார்கள்.  

இந்த பங்காண்மை தொடர்பில் சிங்கர் ஸ்ரீ லங்காவின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் குமார் சமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், சர்வதேச புகழ்பெற்ற வர்த்தக நாமங்களுக்கு இலங்கையின் 1ல் தர விநியோகத்தராக சிங்கர் திகழ்கின்றது.  

Comments