பிரித்தானிய பல்கலைக்கழக உயர் டிப்ளோமா இலங்கையில் | தினகரன் வாரமஞ்சரி

பிரித்தானிய பல்கலைக்கழக உயர் டிப்ளோமா இலங்கையில்

Liverpool John Moores University உடன் ICBT கைகோர்ப்பு

நாட்டின் முன்னணி கல்வியகங்களில் ஒன்றாக திகழும் ICBT,புலமைப் பரிசில்கள், புத்தாக்கம் மற்றும் முன்னேற்ற வழிகாட்டல் ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்கி வருவதுடன், கல்வியின் உயர் நியமங்களைபேணி மாணவர்களுக்கு முன்னேற்றமடைவதற்கான வாய்ப்புகளையும் வழங்குகின்றது. இதனை தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில், ஐக்கிய இராஜ்ஜியத்தின் பெருமைக்குரிய Liverpool John Moores University உடன் கைகோர்த்து, இலங்கையில் பிரித்தானிய பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் உயர் டிப்ளோமா கற்கையை பெற்றுக் கொடுக்கமுன்வந்துள்ளது. இதனைகுறிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, அண்மையில் கொழும்பு 4இல் அமைந்துள்ள ICBT இன் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.  

இந்நிகழ்வில் ICBT இன் தலைவர் கலாநிதி. ஜகத் அல்விஸ் கருத்துத் தெரிவிக்கையில்,“மாணவர்களுக்கு சிறந்த உயர் கல்வி வாய்ப்பை வழங்கி, அவர்களுக்கு உயர்ந்த நிலைக்கு செல்வதற்கு வாய்ப்பளிக்க ICBT ஐச் சேர்ந்த நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். இதற்காக நாம் சர்வதேச ரீதியில் புகழ்பெற்றுள்ள கல்வியகங்களுடன் கைகோர்த்துள்ளோம். இதனூடாக நாடு முழுவதையும் சேர்ந்த மாணவர்களுக்கு நவீன வசதிகள், மெருகேற்றமான பாடவிதானம் மற்றும் அர்ப்பணிப்பான நிபுணத்துவ போதனையாளர்கள் ஆகியவசதிகளை பெற்றுக் கொள்ள வசதி கிடைத்துள்ளது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக அமைந்துள்ளதுடன்,பெருமைக்குரிய Liverpool John Moores University உடன் கைகோர்த்துள்ளதையிட்டுநாம் பெருமைகொள்கின்றோம். நீண்டகால சிறப்பைகொண்டுள்ள இந்த கல்வியகம், கல்வியறிவூட்டலில் தூர நோக்குடைய செயற்பாடுகளுக்காக  அதிகளவு வரவேற்பைப் பெற்று           ள்ளது.”என்றார். 

Liverpool John Moores University ஊடாக,Civil Engineering, Electronic and Electrical Engineering, Biome dical Engineering, Mechanical Engi neering, Automotive Engineering, Mechatronics Engineering, Building Services Engineeringமற்றும் Quantity Surveying போன்ற பிரிவுகளில் உயர் டிப்ளோமா பட்டங்கள் வழங்கப்படும். ICBTஇல் முன்னெடுக்கப்படும் உயர் டிப்ளோமா கற்கையினூடாக, மாணவர்களுக்கு பல பரந்த தெரிவுகள் கிடைக்கின்றன. இதனூடாக சிறந்த விசேடத்துவத்தை பெற்றுக் கொள்ளமுடிவதுடன்,பட்டதாரிகளுக்கு நிஜமான யிலல் அனுபவத்தை பெற்றுக் கொள்ள ஏதுவாக அமைந்துள்ளது. Liverpool John Moores University ஐ பொறுத்தமட்டில், ஐக்கிய இராஜ்ஜியத்தில் காணப்படும் தூர நோக்குடைய மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அமைந்துள்ளதுடன், உலகளாவிய ரீதியில் 100க்கும் அதிகமானநாடுகளின் 23,000க்கும் அதிகமானமாணவர் சமூகத்தைக் கொண்ட பல்கலைக்கழகமாக திகழ்கின்றது. இதில் 2400க்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் 250பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இது ICBTஇன் கொள்கையான திறமைவாய்ந்த, உலகத் தரம் வாய்ந்த தனிநபர்களை,அவர்களின் துறைகளில் சிறப்பாகசெயலாற்றச் செய்து, உலகளாவியரீதியில் காணப்படும் வாய்ப்புகளைபெற்றுக் கொள்ளக்கூடியவகையில் தயார்ப்படுத்துதல் என்பதன் பிரகாரம் அமைந்துள்ளது. 

Comments