மணமகள் | தினகரன் வாரமஞ்சரி

மணமகள்

வெள்ளைத் தாளாய் இருந்தது என் இதயம் – அதில் 
வேலாய்ப் பாய்ந்தது உன் உதயம் 
கள்ளத் தனமாய் காதலித்தேன் உன்னை 
காணாமல் போனாயே கார்முகிலாய்.... 
 
உன் சிரிப்பில் சிதைந்தவன் நான் 
சற்று சிந்திக்காமல் இருந்துவிட்டேன் – உன் 
நடிப்பில் மயங்கியவன் நான் – நீ 
நல்ல நடிகையென்று மறந்து விட்டேனே...
 
உன் அன்பைப் புரியாமலிருந்த என் 
உணர்வுகளால் கூடு கட்டி குடியிருந்தவளே 
என் உள்ளத்தை உடைத்தெறிந்து விட்டு 
எங்கே பறந்து சென்றாய் பைங்கிளியே...
 
உன் வார்த்தைகள் ஏற்படுத்திய காயங்களின்  வலி 
என் இதயத்தை தீப்பிழம்பாய்  சுட்டெரிக்கிறதே 
ஆனால் நீ மட்டும் எப்படி இப்படி  பனிக்கட்டியாய் 
அனலில் இடப்பட்ட மெழுகு நான் மட்டுமா...
 
காதல் ஏக்கத்தில் கவலைப்பட்டு கிடந்தவனை 
கண்டும் காணாதது போல் தவிக்க விட்டு 
ஊர் அறிந்த மணமகளாய் ஊர்வலம் போனாயே – என்னை 
பாவியாய் பரிதவிக்க விட்டுவிட்டு பத்தினி  யானாயே...! 
 
பாசறையூர் ஏ. எஸ். பாலச்சந்திரன்

Comments