மடகஸ்காரில் விபத்து; மூன்று இலங்கையர் ஸ்தலத்தில் உயிரிழப்பு | தினகரன் வாரமஞ்சரி

மடகஸ்காரில் விபத்து; மூன்று இலங்கையர் ஸ்தலத்தில் உயிரிழப்பு

மடகஸ்காரில் நடந்த வாகன விபத்தில் மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். 

வேகமாகச் சென்ற வாகனம் தலைகீழாகப் புரண்டதில் இவர்கள் மூவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரியவருகிறது. 

மாணிக்கக்கல் வர்த்தகர்களான இந்த மூன்று முஸ்லிம்களினதும் ஜனாஸாக்கள் மடகஸ்காரிலேயே நல்லடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.  

உயிரிழந்தவர்களில் கன்னத்தோட்டயைச் சேர்ந்த நிஸ்வர் ஹாஜியாரும் ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர், முன்னாள் அமைச்சர் யூ.எல்.எம். பாறூக்கின் மருமகனாவார். வெலிகமயைச் சேர்ந்த மௌலானா, களுத்துறையைச் சேர்ந்த ஜெளபர் ஆகிய இருவருமே உயிரிழந்த ஏனையவர்களாவர். 

(நமது நிருபர்)  

Comments