தனியுரிமையை முழுமையாக உறுதி செய்யும் ஆடம்பர சொகுசு மாடித் திட்டம் Prime Grand | தினகரன் வாரமஞ்சரி

தனியுரிமையை முழுமையாக உறுதி செய்யும் ஆடம்பர சொகுசு மாடித் திட்டம் Prime Grand

Prime Group இன் முதன்மையான ஆடம்பர உயர் மாடிமனைத் திட்டமான Prime Grand, தனது எதிர்கால குடியிருப்பாளர்களுக்கு 'உச்சக்கட்ட தனியுரிமையை' உறுதிசெய்வதுடன், கொழும்பின் வானத்தை தடங்கலின்றி பார்த்து ரசிக்கும் வாய்ப்பை வழங்குகின்றது. இது கொழும்பு 07இல் அமைந்துள்ள ஒரே ஒரு அதி உயர் மாடிமனைத் திட்டமென்பதுடன். உயர் மட்ட வாழ்க்கையோடு தொடர்புபட்ட ‘வோட் பிளேஸ்’ என்ற முகவரியைக் கொண்டுள்ளது.  

ஒவ்வொருவர் கையிலும் ஸ்மார்ட் போன், ஒவ்வொரு வீட்டிலும் பாதுகாப்பு கமெராக்கள் இருக்கும் இன்றைய உலகில் ஒவ்வொரு வீட்டிற்கும் 'முழுமையான தனியுரிமை' அவசியமானதாகும். எனவேதான், Prime Grand ஐ வடிவமைக்கும் போது தனிமை விரும்பிகளுக்கு தமது வாழ்வை நிம்மதியாக வாழும் பொருட்டு Prime Group ‘தனியுரிமை’ என்ற அம்சத்துக்கு முன்னுரிமையளித்துள்ளது.  

அந்தவகையில், ஒவ்வொரு அம்சத்திலும் அதன் பிரத்தியேக வாடிக்கையாளர்களின் தனியுரிமையை நிலைநிறுத்தும் வகையில் Prime Grand வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று சொகுசு மாடிமனைகளில் குடியிருப்பவர்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய பிரச்சினை தனியுரிமை, அங்கு ஒவ்வொரு மனையும் ஒன்றையொன்று பார்க்க முடியாதவகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மனையின் வாசல் இன்னொரு மனையின் வாசலை நோக்காமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. Prime Grand இல் எந்தவொரு மனை மற்றும் Balcony இன்னொன்றை நோக்கியவாறு அமைக்கப்படவில்லை. இதற்கு ஏற்றால் போல் ஒரு கோபுரம், இரண்டு பிரிவுகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளதுடன், இந்த அமைப்பானது மனைகள் ஒன்று நோக்கியவாறு, புலப்படும் வகையில் இருக்கின்றமையை தவிர்க்கின்றது. மேலும், Prime Grand 100%குடியிருப்பு சார்ந்த திட்டமென்பதுடன், கொழும்பு 07, இலக்கம் 64வோட் பிரதேசத்தில் ஒரு ஏக்கரில் அமைந்துள்ள ஒரே ஒரு அதி உயர் மாடிமனைத் தொடராகும்.  

அந்தந்த தளத்துக்காவும், 5ஆம் மற்றும் 32 ஆம் மாடிகளில் அமைந்துள்ள பொழுதுபோக்கு தளங்களுக்கென மட்டும் ஒதுக்கப்பட்ட ‘Access Controlled’ அட்டைகளுடன் கூடிய மின் தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

Comments