கூட்டமைப்பின் கோரிக்கை நாட்டை ஒருபோதும் பிளவுபடுத்தா | தினகரன் வாரமஞ்சரி

கூட்டமைப்பின் கோரிக்கை நாட்டை ஒருபோதும் பிளவுபடுத்தா

தமிழ்த் தேசிய கூட்டைப்பு முன்வைக்கின்ற கோரிக்கைகளானாலும் சரி தேர்தலில் சஜித்தை ஆதரிக்க எடுத்துள்ள முடிவானாலும் சரி இவை எதுவும் நாட்டைப் பிளவுபடுத்தாது. நாட்டை ஐக்கியப்படுத்தும் என்பதை இனவாதம் பேசுகின்ற தரப்பினருக்கு கூற விரும்புகின்றோமென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்

புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித்துடன் எந்தவித ஒப்பந்தமும் நாம் செய்யவில்லை. அதேநேரம் எந்தவித நிபந்தனையும் விதிக்கவும் இல்லை. இவை ஏதும் இல்லாமலேயே ஆதரிக்கும் நிலைப்பாட்டை நாம் எடுத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முடிவால் தமிழ்த் தரப்பினரின் கோரிக்கைகளுக்கு இணங்கி நாட்டைப் பிரிக்கப் போகின்றார்கள் என தெற்கில் இனவாத ரீதியான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகிறதே? என மாவைசேனாதிராஜாவிடம் தினகரன் வாரமஞ்சரிகேட்டபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

சஜித் பிரேமதாசாவின் நிலைப்பாடு  நாட்டைப் பிளவுபடுத்தப்படுமென்று மஹிந்த ராஐக்ஷ தரப்பினர் தீவிரமாக பேசி வருகின்றனர். வடக்கு, கிழக்கு போரினாலே பாதிக்கப்பட்ட பிரதேசம் என்று அடையாளப்படுத்தி வடக்கு, கிழக்கை மீளக் கட்டியெழுப்ப ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படுமென்று கூறியிருக்கின்றார். அதே போன்று தொழில்துறைகளை தொடங்குவது சம்பந்தமாக வேலை வாய்ப்புகள் சம்பந்தமாக எழுத்துமூலமாகவே பல விடயங்களை அறிவித்திருக்கிறார்.

அரசியல் தீர்வு தொடர்பில் சமஷ்டி என்ற வார்த்தையை பாவிக்காமல் ஒருமித்த நாடு கிட்டத்தட்ட சந்திரிகா பண்டாரநாயக்க, ஒற்றையாட்சியை ஒழித்து பிராந்தியங்களுக்கு உரிமைகள் என்ற பிரேரனைக்கு ஈடாக ஒருமித்த நாடு என்று தெரிவித்து உச்ச அதிகாரங்கள் என்று சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  சமகால தேர்தல் அறிக்கைகள் வெளிப்படுத்தப்பட்ட அல்லது பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்ற அடிப்படையில் நாங்கள் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித்திற்கு ஆதரவு வழங்க வேண்டுமென்று தீரமானம் எடுத்து அறிவித்திருக்கிறோம். இது தான் இன்றைக்கு எங்களுடைய நிலைமை என்றும் அவர் விளக்கமளித்தார்.

மாவை சேனாதிராஜாவின் முழுமையான பேட்டி நாளைய தினகரனில்...

பருத்தித்துறை விசேட நிருபர்

Comments