சமையல் எரிவாயு தட்டுப்பாடு | தினகரன் வாரமஞ்சரி

சமையல் எரிவாயு தட்டுப்பாடு

சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் நாடு முழுவதும் துரிதமாக விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

விற்பனை நிலயங்களுக்கு லொறிகளில் கொண்டு செல்வதற்கு முன்னதாகவே பாவனையாளர்கள் சமையல் எரிவாயு லொறிகளை வீதிகளிலேயே மடக்கி சிலிண்டர்களை வாங்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. 

நேற்று கொழும்பில் சில பகுதிகளில் இவ்வாறு இடம்பெற்றுள்ளது.  

தட்டுப்பாடின்றி நாடு முழுவதும் விநியோகிக்கும் அளவுக்கு எரிவாயு கையிருப்பில் உள்ள போதும் விநியோகத்தில் தாமதம் காரணமாகவே சில வெளி மாவட்டங்களில் இன்னமும் தட்டுப்பாடு நிலவுகிறது. 

விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்வதற்கு முன்னதாகவே பாவனையாளர்கள் லொறியை மடக்கி காஸ் பெறுவதைத் தடுக்கமுடியாது. இதனை தடுப்பதன் மூலம் வீணான குழப்ப நிலை ஏற்படலாம் என்பதற்காகவே பாவனையாளர்களில் விருப்பத்துக்கேற்ப விநியோகம் செய்யப்படுகிறது. 

இந்த நிலை இன்னும் இரண்டொரு தினங்களில் சுமுக நிலைக்கு திரும்பும் என்றும் எரிவாயு நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இன்றும் நாளையும் வெளிமாவட்டங்கள் முழுவதும் விநியோகம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். 

Comments