சாந்தி சமாதானம் சௌபாக்கியம் ஏற்பட பிரார்த்திப்போம் | தினகரன் வாரமஞ்சரி

சாந்தி சமாதானம் சௌபாக்கியம் ஏற்பட பிரார்த்திப்போம்

மீலாதுன் தினம் நபி நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை கொண்டாடும் இலங்கை வாழ் இஸ்லாமிய உள்ளங்களுக்கு மத்தியில் சாந்தி சமாதானம் சௌபாக்கியம் ஏற்பட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார். 

அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு தமது வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு இதனைத் தெரிவித்துள்ளார். 

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நபி நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உலகிற்கு போதித்த நற்பண்புகளையும், அவர்கள் வாழ்ந்து காட்டிய நல்ல வாழ்க்கை முறைகளையும், இறை வேதத்தையும் எமது வாழ்நாள் முழுவதும் பேணி நடப்பதன் மூலம் இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றம் உடையவர்களாக நாம் மாற முடியும். 

இத்தினத்தில் இனங்களுக்கிடையிலான ஐக்கியம் புரிந்துணர்வு, சகோதரத்துவம், சுவிட்சம், மனநிம்மதி மேலலோங்க அல்லாஹ்வுடைய அன்பையும் அருளையும் நாடி நிற்கும் எமது அன்பு நெஞ்சங்களுக்கு என்னுடைய இதயம் கனிந்த மீலாதுன் நபி நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகின்றேன் என்றார்.  

(மாவத்தகம நிருபர்)  

Comments