9 மாகாணங்களில் இடி, மின்னலுடன் கடும் மழை | தினகரன் வாரமஞ்சரி

9 மாகாணங்களில் இடி, மின்னலுடன் கடும் மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு நேரங்கள் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, மேல், தென், வடமேல், வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களிலும் இரவு வேளையில் கடும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல், ஊவா, சப்பரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 50 - 75இற்கும் இடைப்பட்ட மி.மீ மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது. 

பொதுவாக இடி, மின்னல் மற்றும் காற்றுடன் 80 மி.மீவரை நாடு முழுவதும் எதிர்வரும் 24 மணிநேரத்தில் மழை பெய்யக்கூடும்.  இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Comments