கிராம வாழ்வியல் பண்புகளே அடுக்கு மாடி குடியிருப்பு அமைப்புகளில் பின்பற்றப்படுகிறது | தினகரன் வாரமஞ்சரி

கிராம வாழ்வியல் பண்புகளே அடுக்கு மாடி குடியிருப்பு அமைப்புகளில் பின்பற்றப்படுகிறது

Sankan lanka தலைவர் சொல்கிறார்

கிராமங்களில் ஒரே சமூகமாக ஒற்றுமையுடன் வாழ்ந்தவர்கள் மீண்டும் அதே அடிப்படையைக் கொண்ட வாழ்க்கையை நகரங்களில் நிர்மாணிக்கப்படும் செங்குத்தான மாடிக் குடியிருப்புகளில் தொடர்வதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளோம் என்கிறார்கள் அடுக்குமாடி குடியிருப்பு கட்டட நிர்மாணிப்பாளர்கள். எனவே இத்தகைய குடியிருப்புகளை அமைப்பதில் காணப்படும் பிரச்சினைகள் களையப்பட வேண்டும் என்பது இவர்களின் நிலைப்பாடாகும். 

கடந்த ஓகஸ்ட் மாதம் 21ம் திகதி கொழும்பு இலங்கை மன்ற கல்லூரியில் நடைபெற்ற Chamber of construction industry என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பு வாழ்வியலின் எதிர்காலம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்களில் இக் கருத்து தெரிவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவரும் சன்கன் கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான பொறியியலாளர் மேஜர் ரஞ்ஜித் குணதிலக்க இந்த அமர்வுக்கு தலைமை தாங்கினார்.

தனது உரையில், அங்கீகார நடைமுறைகள் தொடர்பான அக்கறைகள், செயற்திட்டகடன் வழங்கல் தொடர்பில் அதிக செலவு மற்றும் வங்கிகளின் ஒருங்கிணைந்த வகிபாகம், உட்கட்டமைப்பு பின்தங்கல்கள், நாணய ஏற்றத்தாழ்வுகள் மூலமானதாக்கம், சமநிலை மாறுபாடு, மூலப் பொருட்களின் இறக்குமதி தொடர்பான பாதுகாப்பு வாதகொள்கைகள், வெளிநாட்டு நேரடிமுதலீடு மற்றும் ஆதனத்தொழிற் துறையில் வரி முரண்பாடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் அன்றைய தினம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன. 

“இந்த பெருநகரங்களில் நிலம், ஏனைய வசதிகள் போன்ற மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை சிறந்தமுறையில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சிக்கனமான தீர்வுகளை நிர்மாணிப்பாளர்களாகிய நாம் நாட வேண்டியுள்ளது. இதனாலேயே அடுக்குமனை செயற்திட்டங்கள் போன்ற எண்ணக்கருவானது வளர்ச்சிகண்டுள்ளதுடன், இதுவே இலங்கையில் நகர வாழ்க்கையின் எதிர்காலமாக அமையும் என்பதில் ஐயம் கிடையாது” என்று அவர் இங்கு குறிப்பிட்டார். எமது இலக்குகளை அடைவதற்கான வழியை நிர்மானிப்பவர்களான நாம் எம் முன்னுள்ள குறைபாடுகளைக் களைந்து உரிய தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. 

Comments