George Steuart காப்புறுதி முகவர்களுடன் இணையும் ஃபெயார்ஃபஸ்ட் இன்சூரன்ஸ் | தினகரன் வாரமஞ்சரி

George Steuart காப்புறுதி முகவர்களுடன் இணையும் ஃபெயார்ஃபஸ்ட் இன்சூரன்ஸ்

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பிரயாண அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் ஃபெயார்ஃபஸ்ட் இன்சூரன்ஸ், George Steuart குழுமத்தின் காப்புறுதி பிரிவான George Steuart காப்புறுதி முகவர் நிறுவனத்துடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. George Steuart ட்ராவல்ஸ் வாடிக்கையாளர்களுக்கு இந்த உடன்படிக்கையினூடாக ‘One stop approach’ பிரயாண சலுகை வழங்கப்படும்.  

சர்வதேச பிரயாணங்களில் காணப்படும் இடர்களை கவனத்தில் கொண்டு, George Steuart காப்புறுதி முகவர்கள் நிறுவனம், ஃபெயார்ஃபஸ்ட் இன்சூரன்ஸ் உடன் கைகோர்த்து, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வழிமுறைகளை பின்பற்றி, ஒப்பற்ற பிரயாண அனுபவத்தை வழங்க முன்வந்துள்ளன.

இந்த சேவை ஃபெயார்ஃபஸ்ட் இன்சூரன்ஸ் ஒன்லைன் கட்டமைப்பினூடாக வழங்கப்படுகின்றது.  

விற்பனை பிரிவின் தலைமை அதிகாரி சஞ்ஜய் சிறிவர்தன கருத்துத் தெரிவிக்கையில், இன்றைய சிக்கல் நிறைந்த உலகில், சுபீட்சத்துக்கு பங்காண்மைகள் முக்கியமானவையாக அமைந்துள்ளன.

இதன் காரணமாக Steuart Wings Travel உடனான பங்காண்மையினூடாக, வாடிக்கையாளர்களுக்கு பிரயாண டிக்கட் மற்றும் காப்புறுதித் திட்டத்தை ஒரே நேரத்தில் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒப்பற்ற சேவைகளை வழங்கக்கூடியதாக இருக்கும். என்றார்.  

George Steuart காப்புறுதி முகவர்கள் நிறுவனத்தின் மூலோபாய பணிப்பாளர் குமார் முத்தையா இந்த பங்காண்மை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “இடையீட்டாளர் எனும் வகையில், நிபுணத்துவமான பங்கை வகிக்க எதிர்பார்க்கும் முகவராக, வினைத்திறன் மற்றும் சேவை விநியோகம் ஆகியவற்றை எமது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது என்பது இந்த நடவடிக்கையின் பிரதான இலக்காக அமைந்துள்ளது” என்றார்.  

சந்தையில் காணப்படும் முன்னணி பொது காப்புறுதி சேவை வழங்குநர் எனும் வகையில், ஃபெயார்ஃபஸ்ட் இன்சூரன்ஸ் நாட்டில் தனது பிரசன்னத்தை மேம்படுத்தும் வகையில் புதிய பங்காண்மைகளை ஏற்படுத்தல் மற்றும் விரிவாக்கல் தொடர்பில் புதிய வழிமுறைகளை நாம் மதிப்பீடு செய்கின்றோம். முகவர்களுடன் பெருமளவு பங்காண்மையை கொண்ட காப்புறுதி சேவை வழங்குநர் எனும் வகையில், ஃபெயார்ஃபஸ்ட் இனால் கிளை வலையமைப்பினூடாக, முன்னணி பங்காளர்கள் மற்றும் முகவர் செயலணியினருடன் இணைந்து காப்புறுதி சேவைகள் வழங்கப்படுவதுடன், பரிபூரண ஒன்லைன் காப்புறுதி கொள்வனவு வசதியும் வழங்கப்படுகின்றது.   

Comments