தாய்மை | தினகரன் வாரமஞ்சரி

தாய்மை

பெண்மையின் பெருமை தாய்மை 
தாய்மையின் பெருமை பிள்ளையின் புகழாரம் 
வெளிச்சம் காட்டாது இருள் காட்டி 
தனித்தவன் காத்து வந்த பிள்ளை உன் வரவு 
உலகமே கையில் ஈன்று கொடுத்தாலும்  
உன்னை உலகிற்கு வெளிக்கொண்டு – வரும் 
அந்த வினாடியின் வலிக்கு ஈடாகாது 
வெயில் மழை பாராது உயர்திய – உன்னிடம் 
எதிர்பார்ப்பது அன்பு பாசம் – ஆனால் 
அருகிலே இருக்கும் நிஜ சொர்க்கத்தை தட்டிவிட்டு 
பேர் புகழ் பட்டம் எனும் மாய சொர்க்கத்திற்காக  
துடிக்கின்றாய் நீ
 
எம். எஸ். எம். முலௌபர்

Comments