13வது திருத்தம் தொடர்பான பிரதமர் மோடியின் கருத்து நம்பிக்ைகயை ஊட்டுகின்றது | தினகரன் வாரமஞ்சரி

13வது திருத்தம் தொடர்பான பிரதமர் மோடியின் கருத்து நம்பிக்ைகயை ஊட்டுகின்றது

பதின்மூன்றாவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கமே இலங்கைத் தமிழர்களுக்கு சமவுரிமை – கௌரவம் என்பவற்றை உறுதிப்படுத்தும் என்று தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைத் தமிழர்கள் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் இந்திய விஜயம் தொடர்பில் தினகரனுக்குக் கருத்துக்கூறிய அமைச்சர், இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இந்தியப் பிரதமர் உள்ளிட்ட பல தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். இதன்போது அவர், நாட்டுக்கும் குறிப்பாக தமிழ் மக்களுக்கும் நம்பிக்கை தரும் வகையில், பல்வேறு விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

நாம் கடந்த மூன்று தசாப்தங்களாக வலியுறுத்திவரும் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படுவது அவசியம் என இந்தியப்பிரதமர் வலியுறுத்தியிருப்பது எமது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை தருவதாக உள்ளது. அத்துடன் எல்லை தாண்டி கடற் தொழிலில் ஈடுபட்டிருந்த

வேளைகளில் கைதுசெய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் மற்றும் அவர்களது படகுகள் உள்ளிட்ட தொழில் துறை உபகரணங்களை விடுவிப்பது தொடர்பிலும் கூறியிருப்பது எமக்கு மிகுந்த நம்பிக்கை தருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

Comments