சர்வதேச மாஆலை தொழில்நுட்பத்தில் தங்க பதக்கம் வென்ற செரண்டிப் மா உற்பத்தியாளர் | தினகரன் வாரமஞ்சரி

சர்வதேச மாஆலை தொழில்நுட்பத்தில் தங்க பதக்கம் வென்ற செரண்டிப் மா உற்பத்தியாளர்

கோதுமை மா உற்பத்தியாளரான செரண்டிப் ஃபிளார் மில்ஸ், ஆலை தொழில்நுட்பத்தில் குழு உறுப்பினர்களுள் ஒருவர்  சர்வதேச பாராட்டைப் பெற்றுள்ளார். உதவி ஆலையாளரான சஞ்ஜீவ தர்மரத்ன - மாணவர் குழாமில் முதலிடத்தைப் பெற்றதன் மூலம் சிறந்த சாதனையாளருக்கான தங்கப்பதக்கத்தை வென்றதுடன், இந்தியாவில் மைசூரில் அமைந்துள்ள மத்திய உணவு தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CFTRI), சர்வதேச மா ஆலை தொழில்நுட்ப கல்வியில் (ISMT) 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த மாணவன்என்ற விருதையும் வென்றுள்ளார். சஞ்ஜீவ ஒரு வருடகால முழு நேர கல்வித்திட்டத்தில் 30க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் இந்திய மாணவா்களுடன் சிறப்பாக செயற்பட்டு இவ்விருதினை வென்றுள்ளார். 

மத்திய உணவு தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி நிறுவனம், (CFTRI) உணவு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் மனிதவள அபிவிருத்தி துறையில் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கு முன்னணி வகிக்கும் நிறுவனமாக திகழ்கிறது. 1981இல் சர்வதேச மா ஆலை தொழில்நுட்ப கல்வியகம் (ISMT) இந்தியா மற்றும் பிற வளர் முக நாடுகளில் மா அரைக்கும் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கிடும் தேவைக்காகவும் மா ஆலை தொழிற்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், இந்திய சுவிஸ் கூட்டுமுயற்சியாக இந்திய மா ஆலைகளின் சம்மேளனத்தினால் நிறுவப்பட்டது.  

செரண்டிப் ஃபிளார் மில்ஸ் இன் சிரேஷ்ட தொழில்நுட்பவியல் அதிகாரியான மொஹமட் ஹம்சாகான் சஞ்ஜீவவின் வெற்றி குறித்து கருத்து தெரிவிக்கையில், சர்வதேச மா ஆலை தொழில்நுட்ப கல்வியில் சஞ்ஜீவவின் சாதனைக்காக முழு செரண்டிப் ஃபிளார் மில்ஸ் குடும்பமும் ஒன்றாக இணைந்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வெற்றியின் மூலம் இவர் எமது கம்பனிக்கு மட்டுமன்றி நமது நாட்டுக்கும் பெருமையை சேரத்துள்ளார். இது மா அரைக்கும் ஆலையின் நவீன தொழில்நுட்பம் தொடர்பாக மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் மிகவும் சிரமமான ஒருவருடகால கல்வித்திட்டமாகும். சஞ்ஜீவ ஒருவருடகால முழு நேர கல்வித்திட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் இந்திய மாணவர்களுடன் கடினமான போட்டித்தன்மையுடன் சிறப்பாக செயற்பட்டு இவ்விருதினை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது என்றார். 

Comments