அவளே ஒரு கவிதைதான்...! | தினகரன் வாரமஞ்சரி

அவளே ஒரு கவிதைதான்...!

என்னவளும் ஒரு கவிதை தான் – என்  
எண்ணமெல்லாம் நிறைந்த வண்ணக்கவிதை தான்  
படிக்கப்படிக்க பல அர்த்தங்கள்  
ஒரு முறை படித்தால் ஒரு அர்த்தம்  
பலமுறை படித்தால் பல அர்த்தம்  
கனியிதழ் மொழியால் படைக்கப்பட்ட கவிதை  
கற்கண்டு சொற்கொண்டு எழுதப்பட்ட கவிதை  
உயிர்த்தேன் கொண்டு உள்ளத்தை ஒட்டிவைத்த கவிதை  
உண்மை அன்பால் ஊறிவிட்ட உன்னதக்கவிதை  
கண்களால் காயம் தீர்க்கும் கவிதை  
கண்ணீரை துடைத்துவிடும் காந்தக் கவிதை  
என்னவளே நீ மட்டும் ஏன் கவிதையாக வந்தாய்?  
என் உள்ளத்தில் நீ நிலைத்திருப்பதால்  
தினம் தினம் உறக்கத்தை இழந்தேனே;  
பலமுறை படித்ததால் பைத்தியக்காரன் ஆனேனே,  
எரியும் நினைவுகளால் உயிர் உருகுவதும்  
உள்ளம் தீப்பிடித்து உடல் வாடுவதும்  
பிரிவின் பெருவலியால் இதயம் துடிதுடிக்க  
தனித்து மனம் தவிப்பதும்  
தனியே நின்று தள்ளாடுவதும்- நீ  
தொடுத்திட்ட கவிதையால் தானோ?  
 
பசறையூர் 
ஏ. எஸ். பாலச்சந்திரன்

Comments