சீரற்ற காலநிலை தொடரும்; வடக்கு, கிழக்கில் கூடுதல் மழை | தினகரன் வாரமஞ்சரி

சீரற்ற காலநிலை தொடரும்; வடக்கு, கிழக்கில் கூடுதல் மழை

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலை நாளையும் (9) நாளைமறுதினமும் (10) அதிகரிக்கக் கூடும் என்பதுடன், வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும். நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையால் இதுவரை 48,329குடும்பங்களைச் சேர்ந்த, 1,63,371பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதுன், 13,310பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பதுளை, இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, மொணராகலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 35மில்லியன் ரூபா நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக இடர் நிவாரண சேவை மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திராய தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் கடும் மழையுடனான வானிலை தொடர்ந்து நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக நாளை 9ஆம் திகதியும், 10ஆம் திகதியும் மேலும் மழை வீழ்ச்சி அதிகமாகும். வடக்கு, கிழக்கு மாகாணங்கங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். 17மாவட்டங்களுக்கு தொடர்ந்து சிவப்பு எச்சரிக்கையையும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

இதேவேளை, மன்னாரிலிருந்து காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அதிக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். அதேபோன்று நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகம் மணிக்கு 30- – 40கிலோ மீற்றர் வரை காணப்படும்.

முல்லைத்தீவிலிருந்து காங்கேசந்துறை, மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக நீர்கொழும்பு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50- – 55கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும். ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 48,329குடும்பங்களைச் சேர்ந்த 1,63,371பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும், நான்கு பேர் மணரமாகியுள்ளதாகவும் 6பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 22,992குடும்பங்களைச் சேர்ந்த 79,182பேரும், வடமாகாணத்தில் 19,831குடும்பங்களைச் சேர்ந்த 64,448பேரும், சம்பரகமுவ மாகாணத்தில் 61குடும்பங்களைச் சேர்ந்த 242பேரும், மத்திய மாகாணத்தில் 330குடும்பங்களைச் சேர்ந்த 1,291பேரும், வடமேல் மாகாணத்தில் 1,486குடும்பங்களைச் சேர்ந்த 5,087பேரும், வட மத்திய மாகாணத்தில் 3,081குடும்பங்களைச் சேர்ந்த 10,775பேரும், ஊவா  மாகாணத்தில் 499குடும்பங்களைச் சேர்ந்த 2,157பேரும், தென் மாகாணத்தில் 49குடும்பங்களைச் சேர்ந்த 189பேரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 13,310பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையும் கூறியுள்ளது.  அனர்த்த நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி,  பதுளை, மட்டக்களப்பு அம்பாறை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, கேகாலை, கண்டி, நுவரெலியா, புத்தளம், குருணாகலை, இரத்தினபுரி, திருக்கோணமலை, அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை, மொணராகலை, பொலனறுவை, மாத்தளை, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களிலேயே அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக நீர்த்தேக்கங்களின் நீர் நிலை அதிகரித்து அவை திறக்கப்பட்டதால் பெருமளவு மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 47வீடுகள் முழுமையாகவும் 1,027வீடுகள் பகுதியளவிலும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. 113பாதுகாப்பு நிலையங்களில் 4,083பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ச்சியாக இடைக்கால நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அதிபட்சமாக 2.5மில்லியன் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட மக்களை நிவாரண நடவடிக்கைகளுக்கு தொடர்ச்சி அரச பொறிமுறையுடன் தொடர்புகளை பேணுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

ராஜாங்கனை, தெதுரு ஓயா, காலவெவ, நாச்சியாதுவ, உடவல, இரணைமடு, வன்னேரி குளம், கனராயன் குளம், பிரமந்தலாறு குளம், முருகண்டி குளம், கல்மடு குளம், கணகம்பாள் குளம், புதுக்குடியிருப்பு குளம், முல்லேரியா நீர்த்தேக்கம் உட்பட பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. ஆற்றுப்பகுதிகளை அண்டி வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

மட்டக்களப்பு மாட்டத்தில் கிரான் பகுதிக்கான பாதை, புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் மற்றும் பழைய மன்னார் பாதை, பொலனறுவையில் சோமாவதி பாதை என்பன முற்றாக நீரில் முழ்கியுள்ளன. அதேபோன்று பதுளை, நுவரெலியா, கண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் சில பிரதேசங்களில் ரயில் பாதைகளில் மண்மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளதால் ரயில் சேவைகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகிறது என்றார்.

இதேவேளை, மொணராகலை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி,  பதுளை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை தேசிய கட்ட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ளது.

பதுளை மாவட்டத்தில், ஹல்துமுல்ல, பசறை, லுனுகல, எல்ல, ஹாலிஎல, பதுளை, அப்புதளை, பண்டாரவளை, சொரனதொட, வெலிமட, ஊவா பரணகம உள்ளிட்ட பிரதேசங்களுக்கும், கண்டி மாவட்டத்தில்,   சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள 22மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு தேசிய இயற்கை காப்புறுதி வேலைத்திட்டத்தின் கீழ் 36மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Comments