வாகன இறக்குமதி தடுக்கப்பட்டதால் ரூபா 1,000 கோடி அரசுக்கு மீதம் | தினகரன் வாரமஞ்சரி

வாகன இறக்குமதி தடுக்கப்பட்டதால் ரூபா 1,000 கோடி அரசுக்கு மீதம்

வைப்பக படம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு புதிதாக வாகனங்கள் இறக்குமதி செய்வது தடுக்கப்பட்டதால் வருடத்துக்கு ஆயிரம் கோடி ரூபாவை மீதப்படுத்த முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீதப்படுத்திக்கொள்ள முடிந்த நிதியை மக்களுக்கான வரிச்சலுகைக்கும், மற்றும் முக்கியமான சேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சர்களின் வாகன இறக்குமதிக்கு மட்டும் 2016-2017காலப்பகுதியில் 3,215மில்லியன் ரூபாவுக்கான குறை நிரப்புப் பிரேரணை நிறைவேற்றிக்கொள்ளப்பட்டுள்ளது.

2016இல் 1,971மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 2017இல் 1,244மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதேபோன்று அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் ஏனைய உயரதிகாரிகளுக்காக வாகன இறக்குமதிக்கு பெருந்தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற வீண் விரயங்களைக் கட்டுப்படுத்தி மிச்சப்படுத்தப்படும் பணத்தை மக்கள் சேவைக்குப் பயன்படுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

2020 ஆண்டில் இதன் மூலம் மேலதிகமாக பத்தாயிரம் மில்லியன் ரூபாவை மீதப்படுத்திக் கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதேவேளை இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை காப்புறுதி செய்வதற்காக செலவிடப்படக்கூடிய முன்னூறு மில்லியன் ரூபாவையும் மக்கள் சேவைக்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Comments