உள்நாட்டு விவசாயிகளுக்கான காப்புறுதி App Sanasa Insurance, GIZ கைகோர்ப்பு | தினகரன் வாரமஞ்சரி

உள்நாட்டு விவசாயிகளுக்கான காப்புறுதி App Sanasa Insurance, GIZ கைகோர்ப்பு

உள்நாட்டில் விவசாய சமூகத்திற்கு உதவும் வகையில் ஒரு எளிமையான மற்றும் பாதுகாப்பான இணைய காப்புறுதித் தளமேடையான iFarm இனை அறிமுகப்படுத்துவதற்காக SANASA Insurance Company Ltd மற்றும் Deutsche Gesellschaft fr Internationale Zusammenarbeit (GIZ) GmbH ஆகியன கைகோர்த்துள்ளன. SANASA Insurance இனால் வழங்கப்படுகின்ற பல்வேறு பெறுமதிசேர் சேவைகளுக்குப் புறம்பாக மேலும் பல காப்புறுதி உற்பத்திகளை உள்நாட்டிலுள்ள விவசாயிகள் அடையப்பெறும் வசதியை Sanasa iFarm பயன்பாடு அவர்களுக்கு வழங்குகின்றது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட காப்புறுதித் திட்டங்களை கொள்முதல் செய்தல் மற்றும் இழப்பீட்டுக் கோரல் நடைமுறையை சீரமைத்தல் போன்ற செயற்பாடுகளை இந்த பயன்பாடு இலகுபடுத்துவதுடன், காலநிலை மற்றும் ஏனைய அழிவுகள் காரணமாக ஏற்படும் இழப்புக்களுக்கு எதிராக இன்னும் அதிக எண்ணிக்கையான உள்நாட்டு விவசாயிகள் தம்மை காப்பீடு செய்ய முடியும்.  

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஜேர்மன் கூட்டாட்சி அமைச்சகத்தின் (German Federal Ministry for Economic Cooperation and Development - BMZ)) சார்பில் GIZ ஆனது cloud அடிப்படையிலான முக்கிய காப்புறுதித் தளமேடையான iFarm இனை வடிவமைப்பதற்கு Surecore என்ற மென்பொருள் வடிவமைப்பு நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டுள்ளது.

காப்புறுதி முகவர் ஒருவர் நேரடியாக சென்று பார்வையிட வேண்டிய தேவை எதுவுமின்றி, விவசாயிகள் தமக்கென கணக்கொன்றை ஆரம்பித்து, காப்புறுதித் திட்ட விண்ணப்பத்தை மேற்கொள்வதற்குத் தேவையான அனைத்து விபரங்களையும் சமர்ப்பிப்பதற்கு iFarm தளமேடை இடமளிக்கின்றது.

உரிய ஆவணங்கள் மற்றும் தகவல் விபரங்கள் அருகாமையிலுள்ள SANASA Insurance கிளைக்கு அனுப்பப்பட்ட பின்னர், பெளதீக ரீதியாக சோதித்து காப்புறுதித்திட்டத்தை பூர்த்தி செய்வதற்கு முகவர் ஒருவர் விவசாயியின் இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்வார். வங்கி வைப்பு, மொபைல் பணம் அல்லது கடனட்டை மூலமாக விவசாயிகள் தங்களது கட்டுப்பணத்தைச் செலுத்த முடியும்.  

Comments