2020 ஜனவரியில் கேபிள் பரிசோதனை வாகனத்தை அறிமுகப்படுத்தவுள்ள மார்ல்போ நிறுவனம் | தினகரன் வாரமஞ்சரி

2020 ஜனவரியில் கேபிள் பரிசோதனை வாகனத்தை அறிமுகப்படுத்தவுள்ள மார்ல்போ நிறுவனம்

நிலத்தடி  மின் இணைப்புகளில் ஏற்படும் மின்னொழுக்குகள், மின் கேபிள்களின் பழுதுகளை  கண்டறியும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வாகனங்களை 2020ஜனவரியில்  இறக்குமதி செய்து சந்தைப்படுத்த உள்ளதாகவும் இதற்கான வர்த்தக உடன்படிக்கை  அண்மையில் ஒஸ்ட்ரியாவின் Baur நிறுவனத்துடன் செய்துகொண்டுள்ளதாகவும்  மார்ல்போ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம். மணிமுத்து தெரிவித்துள்ளார்.   

Baur நிறுவனம் கடந்த 75ஆண்டுகளுக்கு மேலாக உலகின் பல  நாடுகளில் அதன் கிளைகளைக் கொண்டுள்ளது. உலகின் பல நாடுகளில் இவ்வாறான  வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் விலை ஏனைய வாகனங்களை விட இரு மடங்கு  அதிகமாகும். அம்பியூலன்ஸ் வண்டிகளைப்போல சகல தொழில்நுட்ப வசதிகளையும் இந்த  வாகனம் கொண்டுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில் நகர்ப்புறங்களில்  வீதிகளிலேயே மின் இணைப்புகள் காணப்படுகின்றன. மின் கேபிள்கள் பழுதடைந்தாலோ  ஏதேனும் விபத்துகள் ஏற்பட்டாலோ வீதிகளைத் தோண்டியே அதனை சீர்திருத்த  வேண்டியிருக்கிறது. இதனால் ஏற்படும் காலதாமதங்கள் மற்றும் பொதுமக்கள்  எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வாக இந்த கேபிள் பரிசோதனை  வாகனம் அமையும். எதிர்காலத்தில் மின் வழங்கலை முறையாகவும் இலகுவாகவும்  மேற்கொள்வதற்கு வசதியாக இந்த நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வாகனங்கள்  வடிவமைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் முதன்முறையாக மார்ல்போ நிறுவனம் இவ்வாறான  வாகனங்களை இறக்குமதி செய்யவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.  

அத்துடன் மார்ல்போ வர்த்தக நிறுவனம் பல்வேறு BAUR உற்பத்திகளை  2020இலிருந்து சந்தைப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்த பிரதம நிறைவேற்று  அதிகாரி நீல் வீடகம, மின் உபகரணங்களைப் பொறுத்தவரையில் 40வீத பங்குச்  சந்தையைக் கொண்டிருப்பதாகவும் 2022ஆம் ஆண்டில் அதனை 50வீதமாக அதிகரிப்பதே  எமது நோக்கமாகும் என்றார்.  

உலகத்தரம் வாய்ந்த மின் உற்பத்தி சாதனங்களை இறக்குமதி  செய்யும் மார்ல்போ வர்த்தக நிறுவனம் அதன் வருட இறுதி விற்பனையை கடந்த 19,  20, 21ஆகிய திகதிகளில் கொள்ளுப்பிட்டி, அப்துல் கபூர் மாவத்தையிலுள்ள  24ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் நடத்தியது.  

 

Comments