வைரமுத்துவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்க மறுத்த ராஜ்நாத் சிங் | தினகரன் வாரமஞ்சரி

வைரமுத்துவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்க மறுத்த ராஜ்நாத் சிங்

கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று எஸ்.ஆர். எம். பல்கலைக்கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. வைரமுத்துவுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பட்டம் அளிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதை பார்த்தவர்கள் பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த ஒருவருக்கு மத்திய அமைச்சர் கையால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதா என்று கூறி சமூக வலைதளங்களில் கொந்தளித்தார்கள். 

வைரமுத்து பாலியல் புகார்களில் சிக்கியவர், இந்து கடவுளை அவமதித்தவர். தயவு செய்து அவருக்கு கௌரவடாக்டர் பட்டம் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று பலரும் ராஜ்நாத் சிங்கிற்கு சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்தனர். வைரமுத்துவின் பழுதானபெயரை சரி செய்ய இப்படி பட்டம் அளிப்பதா என்று நெட்டிசன்கள் குமுறினார்கள். 

சமூக வலைதளங்களில் கொந்தளிப்பு அடங்கும் முன்பு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள முடியாது என்று ராஜ்நாத் சிங் தற்போது தெரிவித்துள்ளாராம். அதை பார்த்த தமிழக மக்கள் ராஜ்நாத் சிங்கிற்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள். வைரமுத்துவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பழக்கத்தை பெரிய ஆட்கள் நிறுத்த வேண்டும் என்று சமூக வலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர். 

ராஜ்நாத் சிங் வராவிட்டாலும் பட்டமளிப்பு விழா குறிப்பிட்ட திகதியில் வேறு சிறப்பு விருந்தினருடன் நடக்க உள்ளதாம். ஆனால் அந்த விழாவில் வைரமுத்துவுக்கு பட்டம் அளிக்கப்படுமா, இல்லையா என்பது தெரியவில்லை. வைரமுத்துவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட உள்ள செய்தியை பார்த்த சின்மயி அதிர்ச்சி அடைந்து ட்வீட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.     

Comments