21 வருட விரும்பத்தகாத சாதனையில் இணைந்த தென்ஆபிரிக்க வீரர் டீன் எல்கர் | தினகரன் வாரமஞ்சரி

21 வருட விரும்பத்தகாத சாதனையில் இணைந்த தென்ஆபிரிக்க வீரர் டீன் எல்கர்

செஞ்சூரியன் டெஸ்டில் முதல் பந்தில் அவுட்டானதன் மூலம் 21வருட விரும்பத்தகாத சாதனையில் இணைந்துள்ளார் டீன் எல்கர்.    தென்ஆபிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பொக்சிங் டே டெஸ்ட் செஞ்சூரியனில் ஆரம்பமானது. நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.  

அதன்படி தென்ஆபிரிக்க அணியின் டீன் எல்கர், மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை அண்டர்சன் வீசினார். முதல் பந்திலேயே டீன் எல்கர் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.   இதன்மூலம் கெரி கேர்ஸ்டனுக்குப் பிறகு 21 ஆண்டுகளின் பின்னர் முதல் பந்தில் ஆட்டமிழந்த தென்ஆபிரிக்கா வீரர் என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார் டீன் எல்கர்.   மேற்கிந்தியதீவு அணிக்கெதிராக கேப்டவுனில் நடைபெற்ற போட்டியில் கெரி கேர்ஸ்டன் அம்புரோஸ் பந்தில் ஆட்டமிழந்துள்ளார். மேலும், ஜிம்மி குக், எட்டி பார்லோ ஆகியோரும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்துள்ளனர்.   

Comments