குழந்தைகளால் மட்டுமே முடியும்..! | தினகரன் வாரமஞ்சரி

குழந்தைகளால் மட்டுமே முடியும்..!

அது ஒரு விளையாட்டு மைதானம். எட்டு சிறுவர் சிறுமிகள் வரிசையாக நின்று ஓட்டப் பந்தயத்திற்காகத் தயாராகிக் கொண்டிருந்தனர். "ரெடி, ஸ்டடி, கோ...." விளையாட்டுத் துப்பாக்கியின் ஒலி கேட்டு ஓடத் தொடங்கினர். ஒரு 15அடி சென்றிருப்பார்கள். அவர்களில் ஒரு சிறுமி கீழே விழுந்துவிட்டாள். ஓடிக்கொண்டிருந்த சிறார்கள் இதனைக் கண்டு அச்சிறுமியை நோக்கி ஓடி வந்தனர்.  

அதில் ஒரு குழந்தை கீழே குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு "இப்போ வலி போயிடுச்சா" எனக்கேட்டாள். அதைப்பார்த்து ஏனைய சிறார்களும் முத்தமிட்டனர்.

எல்லோரும் இணைந்து அச்சிறுமியைத் தூக்கியவாறு இலக்கை நோக்கி ஓடினர். அதைக்கண்டு விழாக்குழு பார்வையாளர்கள் அனைவருமே அதிர்ச்சியில் கைதட்டிப் பாராட்டினர்.  

இது இந்தியா, ஹைதராபாத்தில் நடத்தப்பட்ட மனநலம் குன்றிய சிறுவர்களுக்கான போட்டி. இச்சிறுவர்கள் மனத்தால் குன்றியவர்கள் ஆனால் குணத்தால்.. இதிலிருந்து அக் குழந்தைகள் உலகத்திற்குக் கூறுவது என்ன? அதனால்தான் நான் கூறுகிறேன். இது குழந்தைகளால் மட்டுமே முடியும். குழந்தைகளுக்கு சாதி, மதவெறி, இனம் தெரியாது. தெரிந்ததெல்லாம் அன்பும் புன்னகையும் மட்டுமே. அது நமக்குத் தெரியாது. ஏன் தெரியுமா? நாம் தான் பெரியவர்களாகி விட்டோமே! 

ச. காவேரி, 
தரம் 07 A,  
யா/ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தி.,   யாழ்ப்பாணம். 

Comments