தமிழ் தலைமைகளின் அரசியல் வழிநடத்தல் முற்றாக தோல்வி | தினகரன் வாரமஞ்சரி

தமிழ் தலைமைகளின் அரசியல் வழிநடத்தல் முற்றாக தோல்வி

சமஷ்டியையும் தனி நாட்டையும் கோரிய தமிழர்கள் இன்று தேசிய கீதத்தை தமிழில் பாட அனுமதியுங்களென கோர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனரென முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

உலக வல்லரசுகளும், உள்நாட்டு அரசுகளும் தமிழர்களைப் பயன்படுத்தி தமது இலக்குகளை அடைந்து விட்டன. தமிழ் தலைமைகள் தோற்றுவிட்டதாகவும் முன்னாள் அமைச்சர் மனேகணேசன் தெரிவித்துள்ளார். 

ஆரம்பத்தில் சமஷ்டியும் அதன்பின்னர் தனி நாட்டையும் மீண்டும் சமஷ்டியையும் கோரிய தமிழர்கள் இன்று “ஐயா, எங்கள் மொழியையும் இலங்கையின் மொழியாக ஏற்றுக்கொள்ளுங்கள், ஐயா, எங்கள் மொழியில் இலங்கையை போற்றிப் பாட அனுமதியுங்கள், ஐயா, எங்களையும் இலங்கையர்களாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கெஞ்ச வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. 

“ஸ்திரமான அரசாங்கம்” என்ற காரணத்தைக் கூறி தேர்தல் சட்டத்தைத் திருத்த வேண்டுமென ஜனாதிபதி கூறுகிறார். தேர்தல் வெட்டுப்புள்ளியை 5 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதத்திற்கு உயர்த்த வேண்டும்

என்ற தனிநபர் பிரேரணையைக் கொண்டுவரவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ அறிவித்தல் கொடுத்துள்ளார். 

ஒளித்து மறைத்து பேச வேண்டியதில்லை. இதுதான் இன்றைய பரிதாபகர நிலைமை. எல்லா உலக வல்லரசுகளும், உள்நாட்டு அரசுகளும் தமிழர்களைப் பயன்படுத்தி தமது இலக்குகளை அடைந்து விட்டன. பாமர தமிழர்களின் நிலைமை அப்படியேதான் உள்ளது.

தமிழர்களை வழி நடத்திய தமிழ் அரசியல் தலைமைகள் தோற்றுபோய் விட்டன என்பதுதான் இங்கே மறைந்து நிற்கும் கசப்பான உண்மை. 

ஆகவே, புதிய சவால்களை, புதிய கோணத்தில் பார்த்து, புதிதாய் சிந்தித்து, புதிய இரத்தம் பாய்ச்சி செயற்பட வேண்டிய தருணம் இது. இதை 2020ஆம் புத்தாண்டின் திடசங்கற்பமாக கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Comments