500மாணவர்களுக்கு பட்டமளித்து கெளரவித்த British Way English Academy | தினகரன் வாரமஞ்சரி

500மாணவர்களுக்கு பட்டமளித்து கெளரவித்த British Way English Academy

British Way English Academy பட்டமளிப்பு விழா, அகடமியின் தலைவர் கலாநிதி எச்.ஏ.எஸ் கீததேவ தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் 500பட்டதாரி மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் என்று சுமார் 1500பேரின் பங்கேற்புடன் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அதி திறமைச் சித்தியடைந்த மாணவர்கள் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.  

British Way English Academy கடந்த 18ஆண்டுகளாக இலங்கையின் தலை சிறந்த ஆங்கில பயிற்சிக் கல்லூரியாக விளங்குகிறது. நாடெங்கிலும் அதன் 16கிளைகள் அமைந்துள்ளதோடு ஆங்கில மொழி போதித்தல் தொடர்பாக தேர்ச்சியுடைய ஆசிரியர் குழாமின் கீழ் மாணவர்களின் ஆங்கில மொழி ஆற்றல் மேம்படுத்தப்படுகிறது. வருடாந்தம் 25,000இற்கும் மேற்பட்ட மாணவர்கள் British Way English Academy டிப்ளோமாவை பெறுகின்றார்கள். 

British Way English Academy மாணவர்களுக்கு நேர்முகப் பரீட்சைகளில் தோற்றுதல், உணவு மேசை சம்பிரதாயங்கள், தலைமைத்துவம், கூட்டமொன்றுக்கு முன்னால் உரையாற்றுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகின்றது. ஆகவே, British Way English Academy கல்வி நிகழ்ச்சித் திட்டத்துக்கு மேம்பட்ட மதிப்பு, அங்கீகாரம் மற்றும் கம்பனிகள் மத்தியில் இக் கல்லூரியின் சான்றிதழ்களுக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது.

Comments