என் தாய் | தினகரன் வாரமஞ்சரி

என் தாய்

தரணியிலே தத்தெடுத்து 

தவமிருந்து என்னை கண்டு 

உசிர் னே தருணத்திலும் 

பல் தெரிய சிரித்து ஏனோ! 

பட்டபாடு சொல்லாம 

பட்டினியால் நீ கெடந்து 

பசித்திருந்த என்னை ரெண்டு கட்டி 

சோறெடுத்து தேங்காப்பு சீனியோட 

நீ ஊட்ட உன் கை வண்ணமோ 

என்னவோ அது போல ருசிய இன்னும் 

ருசிக்கலே வைகையிலே! 

உண்மை மட்டும் பேசு 

என்று நீ கூற 

தண்ணி தவிச்சிதுமா நையாண்டியால் 

நான் போன நேரத்துல 

நான் சொன்னது பொய் என்றும் தெரிஞ்சும் 

கூட தண்ணி எடுத்து தந்து 

மெல்ல சிரிச்ச மனசுக்குள்ளே! 

தடுமல்ன்னா சுடு தண்ணி, பல்வலின்னா 

கொய்யா கொழுந்து, வயித்து வலின்னா 

வெள்ளைப்பூடு இப்படி ஆயுர்வேத 

ஆஸ்பத்திரிய அடுப்படிக்குள்ளே பூட்டி 

வச்சு என் வலிமை ஆத்திவிட்டு 

ஆற்றப்படுத்தும் என் அம்மா! 

எம். எம். முபீஸ்,
கிண்ணியா- 05.  

Comments