வாழ்வளிக்கும் தை மகளே வருக | தினகரன் வாரமஞ்சரி

வாழ்வளிக்கும் தை மகளே வருக

கழனி விளைந்தது – கவலை ஒழிந்தது 

உழவர் தளைத்தனர் – உவகை திளைத்தனர் 

பாலோடு சர்க்கரை – பயறோடு முக்கனி 

சோலைக் கரும்பு இஞ்சி – சோபன மிஞ்சிடும் 

பானையிலே பாலமுதப் பொங்கல் 

பசுமை நிறைந்தியற்கை எழில் தங்கும் 

வானதிரும் வானவெடி எங்கும் 

வந்தனள் தையெனுமினிய திங்கள் 

அறத்தோடு அன்பு சிறந்தோங்க 

அழுக்காறு அவா வெகுளி நீங்க 

சிறப்போடு பல வளங்கள் தாங்கி 

திருமகளே வந்திடுக ஈங்கு 

வான் பொழிய வளங்களெலாம் பெருக 

வாழ் வளிக்கும் தை மகளே வருக 

ஈனமுறு தீச்செயல்கள் அருக 

எல்லோர்க்கும் நல்வாழ்வு தருக 

திருமதி ராஜினி புண்ணியமூர்த்தி

Comments