மனம் என்னும் புதினம் | தினகரன் வாரமஞ்சரி

மனம் என்னும் புதினம்

மனம் எனும் ஒரு புதினப் பொருளில் பேரியக்க மண்டலத்தின் சிறப்புகள் அனைத்தும் அதன் தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றலால் சுருங்கியுள்ளன. எனவே மனித மனம் தன்னைச் சிறுமைப் பொருளாக நினைத்தால் அது சிறியது. தனது மூல நிலையான பிரம்மத்திலிருந்து அதன் பரிணாமச் சிறப்புகள் அனைத்தையும் நினைந்து, தனது மதிப்பை உணரும்போது, அது மிகப் பெரிய தத்துவமாக இருக்கிறது.  

பிரம்ம நிலையில் இருப்பாக இருந்த பூரணம், விரைவு, அறிவு என்ற மூன்று தன்மைகளும் அதன் இயக்கச் சிறப்புகளான பரிணாமம், இயல்பூக்கம், ஆகிய திறன்களும் இப்போது மனித உடலுக்குள் அமைந்து, விரிந்து, நிறைந்து ஆற்றும் சிறப்புகளையும் உணரும்போது மனித மனத்தின் பூரண தத்துவம் விளங்குகின்றது.  

மனம் தன்னைப் பற்றி உணரும் அளவே அதன் மதிப்பு ஆகும். மனம் கொடுக்கும் மதிப்பேதான்  மதிப்பின் அளவே தான் பேரியக்க மண்டலம். இவ்வாறு மனம் விரிந்து முழுமை பெறும்போது தான், அது தன் இருப்பு நினையான பிரம்மத்தையும், இயக்க அலையான மனதையும் ஒன்றாகக் காணுகின்றது.

இந்தப் பெரும்பேறான அகக் காட்சியே ' பிரம்ம ஞானம்' ஆகும். உயிரினத் தோற்றங்களின் இறுதிப் பயனே, மனித மனத்தின் மூலம் தனது முழுமையை அறிவதே ஆகும்.  

சோ. வினோஜ்குமார்,  
தொழிநுட்ப பீடம்,  
யாழ். பல்கலைக்கழகம்,  
கிளிநொச்சி. 

Comments