ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு விருப்பம் | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு விருப்பம்

ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்திருப்பதாகவும் இன்னமும் ஜனாதிபதியின் தரப்பிலிருந்து அதற்கான அழைப்புக்காகக் காத்திருப்பதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரசியல் தீர்வு மற்றும் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேரடியான கலந்துரையாடல்களை நடத்த தயாராகவுள்ளதாக ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்க அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது.   ஆனால், ஜனாதிபதியின் தரப்பில் அதற்கு சாதகமான சமிக்ைஞகள் எதுவும் காட்டப்படவில்லை. இந்நிலையில், நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கோரிக்கையும் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையின் பின்னர் கூட்டமைப்பால் விடுக்கப்பட்டுள்ளது.  

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரும் டெலோ தலைவருமான செல்வம் அடைக்கலநாதனிடம் வினவிய போது,    ஜனாதிபதியுடன் பகிரங்க கலந்துரையாடல்களை நடத்துவதற்காக கோரிக்கையை கூட்டமைப்பின் தலைமை கொடுத்துள்ளது. என்றாலும், இன்னமும் ஜனாதிபதியின் தரப்பிலிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. விரைவில் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை அவர் விடுப்பாரென எதிர்பார்க்கின்றோம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்   

Comments