தேசிய வியாபார சிறப்புகள் விருது விழாவில் தங்கொட்டுவ போர்சலேனுக்கு விருது | தினகரன் வாரமஞ்சரி

தேசிய வியாபார சிறப்புகள் விருது விழாவில் தங்கொட்டுவ போர்சலேனுக்கு விருது

தேசிய வியாபார சிறப்புகள் விருதுகள் 2019நிகழ்வில், இரசாயனப் பொருட்கள், செரமிக் மற்றும் கண்ணாடி பிரிவுகளில் சிறந்த உற்பத்தியாளருக்கான விருது தங்கொட்டுவ போர்சலேன் பிஎல்சிக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டிருந்தது. சொகுசான மற்றும் கண்கவர் போர்சலேன் மேசைப் பாவனை தயாரிப்புகளுக்கு சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற தங்கொட்டுவ போர்சலேன், உலகளாவிய ரீதியலும், இலங்கையிலும் மில்லியன் கணக்கானவர்களின் முதல் தர தெரிவாக அமைந்துள்ளன.  

Ambeon ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் துணை நிறுவனமாக திகழ்வதுடன், ஐரோப்பிய தயாரிப்பு அலங்கார விருதுகள் 2017நிகழ்வில் catering products/tabletop specialties பிரிவில் வெண்கல விருதை பெற்றிருந்தது. தங்கொட்டுவ போர்சலேன் பின்பற்றி வரும் உயர் தரத்தினுௗடாக நிறுவனத்துக்கு இந்த கெளரவிப்பு பெறப்பட்டுள்ளது. நிறுவனத்தை பொறுத்தமட்டில் 2019ஆம் ஆண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. NCE ஏற்றுமதி விருதுகள் 2019இல் தங்க விருதை சுவீகரித்திருந்ததுடன், ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் 2018/19நிகழ்வில் செரமிக் மற்றும் போர்சலேன் தயாரிப்புகள் பிரிவில் சிறந்த ஏற்றுமதியாளருக்கான விருதை வென்றிருந்தது. 

Ambeon கெப்பிட்டல் பிஎல்சி மற்றும் Ambeon ஹோல்டிங்ஸ் பிஎல்சி ஆகியவற்றின் குழும முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான முரளி பிரகாஷ் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையின் ஏற்றுமதியில் பங்களிப்பு வழங்கும் முன்னணி போர்சலேன் தயாரிப்பாளரும், இலங்கையில் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பு வழங்கும் தங்கொட்டுவ போர்சலேன், Ambeon குரூப்பின் முக்கிய அங்கமாக திகழ்கின்றது. நிறுவனம் எனும் வகையில், தங்கொட்டுவ  போர்சலேன் தொடர்ந்தும் புத்தாக்கமான தயாரிப்புகளை உற்பத்தி செய்து. உலக நாடுகளிலும், உள்நாட்டு சந்தையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்து, வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணத்துக்கு பெறுமதியை சேர்க்கின்றது. 

Comments