புதிய Renault KWID Climber Automatic இலங்கையில் | தினகரன் வாரமஞ்சரி

புதிய Renault KWID Climber Automatic இலங்கையில்

அசோசியேட்டட் மோட்டர்வேய்ஸ் (பிரைவட்) லிமிடெட், தனது புதிய Renault KWID Climber automatic காரை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. சிறந்த வெளிப்புறத் தோற்றம் மற்றும் பொறியியல் சிறப்பு ஆகியவற்றை கொண்டுள்ளதுடன், 16முதல்தர உள்ளம்சங்களையும் கொண்டுள்ளது. புதிய Renault KWID Climber automatic இனால் சிறந்த வலு மற்றும் எரிபொருள் சிக்கனம் வழங்கக்கூடிய வகையில் உயர் தொழில்நுட்ப 1000cc என்ஜின் அடங்கியுள்ளது. அதிகளவு இடவசதியுடன், செளகரியமான கெபின் வசதியும் காணப்படுகின்றது. இதன் கியர் கட்டமைப்பு மற்றும் intelligent Traffic Assist ஊடாக வாகனம் செலுத்துபவர்களுக்கு சிறந்த அனுபவத்தை சேர்க்கின்றது. 

புதிய Renault KWID Climber automatic இல் பார்வையிடக்கூடிய முதலாவது உள்ளம்சமாக, முன்னைய தெரிவுகளுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளது. முற்றிலும் புதிய தோற்றம் என்பது ஆரம்பமாக அமைந்துள்ளது. வாகனத்தின் உள்ளம்சம், மறுசீரமைக்கப்பட்ட நவீன 1000cc என்ஜின் மற்றும் புதிய மேம்படுத்தப்பட்ட உள்ளம்சங்கள் போன்றன புதிய மாதிரிக்கு ஏனைய இதே வகுப்பு வாகனங்களுடன் ஒப்பிடுகையில் உயர்ந்த வாய்ப்பை வழங்குவதாக அமைந்துள்ளன. புதிய Renault KWID Climber Automatic இல் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம், பிரான்ஸில் பின்பற்றப்படும் புதிய சுநயெரடவ தொழில்நுட்பத்தை பின்பற்றியதாக அமைந்துள்ளது. எடுப்பான புதிய தோற்றத்துடன், நவீன ஃபிரான்ஸ் பொறியியல் நயம் ஆகியன புதிய Renault KWID Climber Automatic ஐ செலுத்துவதற்கு இனிய அனுபவத்தை சேர்ப்பதாக அமைந்துள்ளதுடன், ஏனைய இதே வகுப்பு வாகனங்களிலிருந்து வேறுபட்டதாக திகழச் செய்துள்ளன. 

புதிய Renault KWID Climber Automatic செலுத்துவோர், பல புதிய உள்ளம்சங்கள் அடங்கியிருப்பதை அவதானிப்பதுடன், விரல் நுனிகளில் பெருமளவு செளகரியத்தை சேர்க்கும் புத்தாக்கமான சேர்மானங்கள் காணப்படுவதையும் உணர்வார்கள். நவீன கால நகர பகுதி சாரதிகளின் தேவைகளுக்கு பொருந்தும் வகையில் விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக power shutters போன்ற உள்ளம்சங்கள் பெருமளவு செளகரித்தை சேர்ப்பதுடன், intelligent traffic assistant mode மற்றும் மிகத் துல்லியமான reverse camera நிபுணத்துவமான வாகன தரிப்பு அனுபவத்தையும் பெற முடியும்.    

Comments