உயிரின் உபதேசம்! | தினகரன் வாரமஞ்சரி

உயிரின் உபதேசம்!

உயிருள்ள மனிதா!   
உன்   
உடல் கூண்டினுள்   
உயிர் நான்   
குடியிருப்பதால்தான் நீ   
உயிரென்று பெயர் பெற்றாய்!   
உயிரினமாக உலகில் நீ   
உயிர் வாழ்கிறாய்!   
கருவறையில் நீ   
கருவாய் இருந்தவுடன்   
உனக்குள்ளே நான்   
வந்து விட்டேன்!   
உன்னில் எழும்   
மூச்சும் பேச்சும்   
கேள்வியும் பார்வையும்   
எண்ணமும் இயக்கமும்   
ஆட்ட அசைவுகளும்   
என்னால்தானே   
ஏற்றமாக நடைபெறுகிறது!   
உன்னக்குள்   
நான் இல்லையென்றால்   
எல்லாமே தடைப்படுகிறது!   
உயிரற்ற சடம் என்று   
உனக்கு பெயரும் வருகிறது!   
விலைமதிப்பற்ற   
உயிர் எனக்கு சிலர்   
உலை வைக்கிறார்கள்!   
உயிர் போனபின்   
உயிரற்ற என்னுடலுக்கு   
சிலை வைக்கிறார்கள்!   
உருவமில்லாத   
உயிர் நான்   
உன்னுடலிருந்து   
எப்போது போவேனென்று   
எனக்கே தெரியாது!   
ஆனால், நான்   
எப்படியோ போவேன்!   
உயிர்நான் பிரிந்தவுடன்   
உன் உறவுகளெல்லாம்   
உனக்காக அழுவார்கள்!   
ஆத்மாவுக்காகத் தொழுவார்கள்!   
உயிருள்ள மனிதனே!   
உயிர் என்னை   
உயிராக கொள்!   
உணர்வாக கொள்!   
உயிரை நீ தூய்மையாய் ஆக்கு!   
வாய்மையாய் நோக்கு!   
உயிருள்ளவரை   
ஒவ்வொரு செயல்களையும்   
உயர்வாக செய்!   
உன்   
உயிரைப்போல்   
எல்லா உயிர்களையும்   
உன்னதமாக நேசி!   
உயிர்களை எல்லாம்   
உணர்வுகளால் சுவாசி!   
அப்போதுதான்   
உன் உயிர் சாந்தி பெறும்!   
 
காத்தான்குடி 
கலைமதி றபாய்தீன்

Comments