நான் வரவா? | தினகரன் வாரமஞ்சரி

நான் வரவா?

கோயில் நீ   
உனக்குள்ளே   
தெய்வமாய் நான் வரவா?   
சோலை நீ   
அதற்குள்ளே   
தென்றலாய் நான் வரவா?   
மண மலர் நீ   
உள் நுழைந்து   
மதுவருந்த நான் வரவா?   
நீரருவி நீ   
அதில் நீந்தி   
விளையாட நான் வரவா?   
பச்சைப் பசுங் கிளி நீ   
உனக்குப்   
பழமூட்ட நான் வரவா?   
இசைக்கும் வீணை நீ   
அதைத் தினமும்   
இயக்கிட நான் வரவா?   
பிருந்தாவன ராதை – நீ   
விருந்துண்ண   
மன்மதனாய் நான் வரவா?   
 
ஹஸ்ஸான் 
ஏறாவூர் 

Comments