வளர்பிறையாய்... | தினகரன் வாரமஞ்சரி

வளர்பிறையாய்...

அன்பே நீ   
என்னை விட்டு   
பிரிந்த போதும்   
உன்னை மறக்க   
முயன்ற ஒவ்வொரு   
நிமிடமும் உன்   
ஞாபகமே என்னுள்   
மீண்டும் மீண்டும்   
வளர்பிறையாய் வளர்கின்றன   
உன் ஞாபங்களை   
கழற்றிவிட்டு   
விலகத்தான் விரும்புகிறேன்   
என்னுளத்தில் பசையாய்   
ஒட்டிவிட்ட உன்   
நினைவுகளில் மூழ்கி   
வாழும் நான் மீண்டும்   
உன்னைச் சந்தித்த   
பின்னர்தான் என்   
பிறவியே அர்த்தப்படும்   
அன்பே..!   
 
என்.கே. வேணி,   
பலாங்கொடை

Comments