அதிகாரமுள்ள பாராளுமன்றம் அமைப்பதே எமது நோக்கம் | தினகரன் வாரமஞ்சரி

அதிகாரமுள்ள பாராளுமன்றம் அமைப்பதே எமது நோக்கம்

அதிகாரமுள்ள பாராளுமன்றம் ஒன்றை நாம் அமைக்க மாட்டோம் என முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கூறுகின்றார். ஆனால், கூடுதல் அதிகாரமுள்ள பாராளுமன்றமொன்றை நாம் அமைப்பதை ரிஷாத் நிச்சயம் காண்பாரென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.  

மன்னாருக்கு நேற்றுக் (18) காலை விஜயம் செய்த அமைச்சர் விமல் வீரவன்ச, காலை 10மணியளவில் மன்னார் பெரியகடை பகுதியில் அமைந்துள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்திற்கு (மாந்தை சோல்ட் லிமிற்றெற்) திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.  

உப்பு உற்பத்தி நிலையத்தை பார்வையிட்டதோடு, அங்குள்ள பிரச்சினைகள் குறைபாடுகளையும் கேட்டறிந்து கொண்டார்.    அதன் பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாணத்திலுள்ள அரச நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளைக் கண்கானித்து அவற்றை அபிவிருத்தி செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதே எனது அமைச்சின் நோக்கம்.    அதன்படி மன்னாரிலுள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தின் உற்பத்திகள் நாட்டின் சந்தைக்கும், பாவனையாளர்களுக்கான உப்பை உற்பத்தி செய்கின்றது.    உப்பு உற்பத்தி நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்வதன் மூலம் இப்பகுதியைச் சேர்ந்த இளைளுர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமென நாங்கள் எதிர் பார்க்கின்றோம்.    நாட்டுக்குத் தேவையான வளங்களை எமது நாட்டிலேயே உற்பத்தி செய்வதுடன் வெளி நாட்டிடம் எதிர்பார்க்காமல் இருப்பதே எமது நோக்கம்.    இவ் விஜயம் ஒரு கண்காணிப்பு விஜயமாகவே அமைந்துள்ளது. நான் தொழிற்சாலைகள் அமைச்சரே தவிர வர்த்தக அமைச்சரல்ல.    தொழிற்சாலை உற்பத்திகள் குறித்து சிறந்த வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தால் அவற்றைத் தொடர்ந்து நாம் முன்னெடுத்திருப்போம்.  

தற்போதைய பாராளுமன்றம் காலவதியாகி விட்டது. அதனால், நாங்கள் ஒற்றும் செய்ய முடியாது.மார்ச் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது. கலைக்கப்பட்ட பின் தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம். அதன் போது பல்வேறு திட்டங்களை நடை முறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். எனவே அதிராமுள்ள பாராளுமன்றம் ஒன்றை அமைப்பதே எமது நோக்கம். 

மன்னார் குறூப் நிருபர்  

Comments