கண்டி பொது வைத்தியசாலையின் சிகிச்சை விடுதி புனரமைப்புக்கு NOLIMIT உதவி | தினகரன் வாரமஞ்சரி

கண்டி பொது வைத்தியசாலையின் சிகிச்சை விடுதி புனரமைப்புக்கு NOLIMIT உதவி

நவநாகரிக சில்லறை வியாபார சங்கிலித் தொடரான NOLIMIT, கண்டி பொது வைத்தியசாலையின் சிகிச்சை விடுதி இலக்கம் 23இனை அண்மையில் புனரமைப்புச் செய்துள்ளது. Aseemitha என்ற பெயரில் NOLIMIT முன்னெடுத்துவரும் அதன் வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டத்தின் கீழ் இந்த புனரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், எல்லையற்ற உணர்வுகளுடன் உள்நாட்டு சமூகங்கள் மத்தியில் நற்பயனைத் தோற்றுவிப்பதில் இச்செயற்திட்டம் கவனம் செலுத்தியுள்ளது. இச்சிகிச்சை விடுதியை புனரமைப்பு செய்வதற்கு முன்னர் குருணாகல் போதனா வைத்தியசாலை, நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலை, டி சொய்சா வைத்தியசாலை, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை, பாணந்துறை ஆதார வைத்தியசாலை மற்றும் களுபோவிலை போன்ற வைத்தியசாலைகளிலும் சுகாதாரப் பராமரிப்பு உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளுக்கு NOLIMIT உதவியுள்ளது.  

கண்டி வைத்தியசாலையின் இந்த சிகிச்சை விடுதியின் தேவைகளுக்கு அமைவாக கணிசமான அளவில் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்ட பின்னர் அவ்விடுதியின் நோயாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் கையளித்து வைத்துள்ளமை பெருமகிழ்ச்சியைத் தருவதாக NOLIMIT இன் சந்தைப்படுத்தல் துறை பணிப்பாளர் றனீஸ் ஷெரீஃப் குறிப்பிட்டார். “Aseemitha என்ற எமது வர்த்தக சமூகப் பொறுப்புணர்வு முன்னெடுப்பினூடாக அனைவரினதும் வாழ்வை மேம்படுத்தும் வழிமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதுடன், முக்கியமான ஒரு துறையாகவுள்ள சுகாதாரப் பராமரிப்புத் துறையில் NOLIMIT முக்கிய பங்காற்றி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.  

இந்த புனரமைப்பு நடவடிக்கை தொடர்பில் கண்டி வைத்தியசாலையின் நிர்வாகத்தினர் கருத்து வெளியிடுகையில், அவசரமாக கவனம் செலுத்தவேண்டிய தேவையைக் கொண்டிருந்த இந்த சிகிச்சை விடுதியை புனரமைப்பதற்கு தன்னார்வத்துடன் முன்வந்த NOLIMIT அணியை நாம் மிகவும் போற்றுகின்றோம். புனரமைப்பு நடவடிக்கையின் போது பணிகளை NOLIMIT  மிகவும் சிறப்பாக முன்னெடுத்துள்ளதுடன், நோயாளர்களின் தேவைகளை கவனத்தில் கொண்டு, செயற்திட்டம் வேகமாக பூர்த்தி செய்யப்படுவதையும் உறுதிசெய்துள்ளது. 

Comments